Enable Javscript for better performance
85 ரன்களுக்கு வீழ்ந்த இங்கிலாந்து: அயர்லாந்து 122 ரன்கள் முன்னிலை- Dinamani

சுடச்சுட

    

    85 ரன்களுக்கு வீழ்ந்த இங்கிலாந்து: அயர்லாந்து 122 ரன்கள் முன்னிலை

    By DIN  |   Published on : 25th July 2019 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tim1


    அயர்லாந்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் அதிர்ச்சியளிக்கும் வகையில் 85 ரன்களுக்கு சுருண்டது. 
    லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட் செய்யத் தீர்மானித்தது. 
    தொடக்க வீரர்களான ரோரி பர்ன்ஸ் 6, ஜேசன் ராய் 5 ரன்களில் நடையைக் கட்டினர். அடுத்துவந்த ஜோ டென்லி 4 பவுண்டரிகள் உள்பட 23 ரன்கள் எடுத்தார். சாம் கரன் 2 பவுண்டரிகளுடன் 18, ஆலி ஸ்டோன் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சேர்த்தனர். எஞ்சியவர்களில் ஸ்டூவர்ட் பிராட் 3, கேப்டன் ஜோ ரூட் 2, ஜேக் லீச் 1 ரன் எடுக்க, ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் டக் அவுட்டாகினர். 
    அடுத்தடுத்த விக்கெட் சரிவால் 23.4 ஓவர்களில் 85 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து. அயர்லாந்து தரப்பில் டிம் முர்டாக் 13 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். மார்க் அடைர் 3, பாய்ட் ரான்கின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 
    அயர்லாந்து 207: இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய அயர்லாந்து 58.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. 
    அதிகபட்சமாக ஆன்டி பால்பிர்னி 10 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் எடுத்தார். எஞ்சியவர்களில் பால் ஸ்டிர்லிங் 36, கெவின் ஒபிரையன் 28, ஜேம்ஸ் மெக்கோலம் 19, டிம் முர்டாக் 16, கேப்டன் போர்டர் ஃபீல்டு 14, ஆன்டி மெக்பிரைன் 11, பாய்ட் ரான்கின் 7, மார்க் அடைர் 3 ரன்கள் எடுத்தனர். வில்சன், தாம்சன் டக் அவுட்டாகினர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட், ஆலி ஸ்டோன், சாம் கரன் தலா 3 விக்கெட்டுகளும், மொயீன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.  
    தற்போதைய நிலையில் அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai