இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஜான்டி ரோட்ஸுக்குத் தகுதி உண்டா?

இந்தப் பதவிக்குத் தான் விண்ணபித்துள்ளதை ரோட்ஸும் உறுதி செய்துள்ளார்...
இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஜான்டி ரோட்ஸுக்குத் தகுதி உண்டா?

இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியது. இதற்கிடையே அணியின் உடலியக்கவியல் நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோர் விலகி விட்டனர். தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு மே.இ.தீவுகள் தொடர் வரை 45 நாள்கள் பணி நீட்டிப்பு தரப்பட்டுள்ளது.

இதற்கிடையே தலைமை பயிற்சியாளர் உள்பட அணியின் இதர பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ சிஓஏ அறிவித்துள்ளது. வரும் 30-ஆம் தேதி இதற்குக் கடைசி நாளாகும். 

இந்நிலையில் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஃபீல்டிங்குக்கு என்றே புகழ்பெற்ற தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார். இந்தப் பதவிக்குத் தான் விண்ணபித்துள்ளதை ரோட்ஸும் உறுதி செய்துள்ளார். எனினும் அவர் இதுவரை எந்தவொரு தேசிய அணிக்கும் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பதவி வகித்ததில்லை. இதனால் அவரைத் தேர்வு செய்வதில் சிக்கல் இருக்குமோ என்கிற கேள்வி எழுந்தது.

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக 9 வருடங்கள் ரோட்ஸ் பணியாற்றியுள்ளார். ஐபிஎல்-லில் 3 வருடங்கள் பணியாற்றினாலே இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ சார்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com