உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ள டெஸ்ட் தொடர்கள்!

ஆகஸ்ட் 22 முதல் இப்போட்டிக்கான இந்திய அணியின் பயணம் தொடங்குகிறது...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ள டெஸ்ட் தொடர்கள்!

ஆகஸ்ட் 1 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து இப்போட்டி தொடங்குகிறது. 

ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் என 9 அணிகள் போட்டியிடுகின்றன. 27 தொடர்களில் 71 டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளை எடுக்கும் இரு அணிகள் 2021 ஜூனில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் போட்டியிடும். இதில் வெல்லும் அணி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும். ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும். ஒரு தொடரின் டெஸ்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். எவ்வளவு டெஸ்டுகளை ஓர் அணி வெல்கிறதோ அவ்வளவு புள்ளிகளை அள்ள முடியும். 2 டெஸ்டுகள் உள்ள தொடரில் ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகளும் 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் ஒரு வெற்றிக்கு 24 புள்ளிகளும் கிடைக்கும். டிரா ஆனால் முறையே 20 மற்றும் 8 புள்ளிகள் கிடைக்கும். 

இந்திய அணி தனது முதல் டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு அணிக்கு எதிராக விளையாடுகிறது. ஆகஸ்ட் 22 முதல் இப்போட்டிக்கான இந்திய அணியின் பயணம் தொடங்குகிறது. இந்திய அணி உள்ளூரில் 3 தொடர்களும் வெளிநாடுகளில் 3 தொடர்களும் விளையாடவுள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் தொடர்கள் 

ஆகஸ்ட் 2019: 2 டெஸ்டுகள் v மே.இ. அணிகள் (வெளிநாடு)

அக்டோபர் - நவம்பர் 2019: 3 டெஸ்டுகள் v தென் ஆப்பிரிக்கா (உள்ளூர்)

நவம்பர் 2019: 2 டெஸ்டுகள் v வங்கதேசம் (உள்ளூர்)

பிப்ரவரி 2020: 2 டெஸ்டுகள் v நியூஸிலாந்து (வெளிநாடு)

டிசம்பர் 2020: 4 டெஸ்டுகள் v ஆஸ்திரேலியா (வெளிநாடு)

ஜனவரி - பிப்ரவரி 2021: 5 டெஸ்டுகள் v இங்கிலாந்து (உள்ளூர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com