முகப்பு விளையாட்டு செய்திகள்
தோனிக்கு பாராட்டு
By DIN | Published On : 30th July 2019 01:08 AM | Last Updated : 30th July 2019 01:08 AM | அ+அ அ- |

தோனியின் தாய்நாட்டுப் பற்றுக்கு தலைவணங்குகிறேன் என மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏனைய ராணுவ வீரர்களைப் போல் தோனிக்கும் தீவிர பயிற்சி தரப்படுகிறது. ஆனால் தாக்குதல் நடவடிக்கைகளில் அவர் சேர்க்கப்படவில்லை.
மே.இ.தீவுகள் வீரர் காட்ரெல் கூறியதாவது:
கிரிக்கெட் மைதானத்தில் ஒரு உந்துசக்தியாக உள்ளார் தோனி. அவரது நாட்டுப் பற்றுக்கு நான் தலைவணங்குகிறேன். குடும்பத்தைக் காட்டிலும் நாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் தோனி என தனது சுட்டுரையில் புகழாரம் சூட்டியுள்ளார்.