துளிகள்...

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியின் ஒரு பகுதியாக புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா அணியை 9-6 என்ற கேம் கணக்கில் தில்லி தபாங் வென்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் டூ ஹோய் கெம், சுதிர்தா முகர்ஜி, ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜென் பெர்ஸ்ஸன், சத்யன், கலப்பு இரட்டையர் பிரிவில் சத்யன்-பெர்னார்டே இணை ஆகியோர் வெற்றி பெற்றனர்.


காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் நிரந்தரமாக இடம் பெறச் செய்ய வேண்டும். அதை நீக்கினால் அந்த விளையாட்டு விரைவில் மறைந்துவிடும் என நட்சத்திர வீராங்கனை ஹீனா சித்து கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் எங்கள் பின்னால் பலமாக நிற்கிறது என்றார் அவர்.


மியான்மர் தலைநகர் நே பிடாவில் வரும் ஆக. 3 முதல் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள 23 வயதுக்குட்பட்டோர் ஆசிய வாலிபால் சாம்பியன் போட்டியில் இந்தியா சார்பில் கேப்டன் அமித் தலைமயில்12 பேர் கொண்ட அணி கலந்து கொள்கிறது. இதற்காக 31-ஆம் தேதி  அணி மியான்மர் செல்கிறது என இந்திய வாலிபால் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ராமவதார் சிங் ஜாக்கர் கூறியுள்ளார்.


இலங்கையில் செப்டம்பர் 3 முதல் 15 வரை நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோர் யூத் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இளம் விக்கெட் கீப்பர் துருவ் சந்த் ஜுரெல் தலைமையிலான இந்திய அணி கலந்து கொள்கிறது.


நான் விதிக்கும் நிபந்தனைகள், நெறிமுறைகளை ஏற்றால், இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளேன் என ஹரேந்திர சிங் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் தோல்விக்கு பின் இந்திய சீனியர் அணி தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து திடீர் நீக்கம் செய்யப்பட்டார் ஹரேந்திரா.


வரும் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு கடும் சவாலை மே.இ.தீவு அணி வீரர்கள் தருவார்கள் என நம்புவதாக ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com