Enable Javscript for better performance
சாம்பியன் பட்டம் கைகூடுமா? இலங்கையுடன் இன்று நியூஸிலாந்து மோதல்- Dinamani

சுடச்சுட

    

    சாம்பியன் பட்டம் கைகூடுமா? இலங்கையுடன் இன்று நியூஸிலாந்து மோதல்

    By DIN  |   Published on : 01st June 2019 12:53 AM  |   அ+அ அ-   |    |  

    srilanka


    6 முறை அரையிறுதிச் சுற்று, 1 முறை இறுதிச் சுற்றில் நுழைந்த போதிலும் இதுவரை கைகூடாத சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் நோக்கில் முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் கார்டிஃப் வேல்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை முதல் ஆட்டத்தில் மோதுகிறது நியூஸிலாந்து.
    பிளாக் கேப்ஸ் என அழைக்கப்படும் நியூஸிலாந்து அணி எதிரணிகளுக்கு வியப்பை ஏற்படுத்தும் அணிகளில் ஒன்றாக விளங்குகிறது. 
    உலகக் கோப்பை போட்டிகளில் 6 முறை அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், கடந்த 2015 போட்டியில் தான் இறுதிக்கு முதன்முறையாக தகுதி பெற்றது. அதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.
    கேன் வில்லியம்ஸன் தலைமையிலான அந்த அணி ஐசிசி பட்டியலில் 4-ஆவது இடத்தில் உள்ளது. சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்திடம் தோற்றாலும், நியூஸிலாந்து அபார திறனுடனே உள்ளது. 
    நியூஸிக்கு சாதகம்: உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வலுவான இந்தியாவை எளிதில் வென்ற உற்சாகத்துடன் உள்ளது நியூஸி. வில்லியம்ஸன், மார்ட்டின் கப்டில், ராஸ் டெய்லர், பேட்டிங்கிலும், டிரென்ட் பெளல்ட், டிம் செளதி, காலின் டி கிராண்ட்ஹோம், இஷ் சோதி, சான்ட்நர் ஆகியோர் பந்துவீச்சிலும் வலு சேர்க்கின்றனர்.  இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.
    நிலைகுலைந்துள்ள இலங்கை: அதே நேரத்தில் இலங்கை அணி பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து உலகக் கோப்பையில் கலந்து கொள்கிறது. குறிப்பாக அந்த வாரியத்தில் நிர்வாகிகள் மத்தியில் குழப்பம், மேட்ச், ஸ்பாட் பிக்ஸிங் புகார்கள் போன்றவற்றால் வீரர்கள் மீது நடவடிக்கையால் இலங்கை அணி பாதிக்கப்பட்டது.
    அந்த அணியின் புதிய கேப்டனாக திமுத் கருணரத்னே நியமிக்கப்பட்டார். கடைசியாக ஆடிய 9 ஒருநாள் ஆட்டங்களில் இலங்கை 8-இல் தோற்றுப் போனது. 
    ஒருமுறை சாம்பியன், 2 முறை ரன்னர், 1 முறை அரையிறுதிக்கு தகுதி என உலகக் கோப்பையில் இலங்கை அணியின் பயணமும் அபாரமாகவே காணப்படுகிறது. ஏஞ்சலோ மேத்யூஸ், குஸால் பெரைரா, குஸால் மெண்டிஸ் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். அதே நேரத்தில் பந்துவீச்சில் அனுபவ வீரர் லஸித் மலிங்கா, சுரங்க லக்மல், நுவன் பிரதீப், லஹிரு திரிமனே, ஜெப்ரி வண்டார்úஸ ஆகியோர் பக்கபலமாக இருப்பர்.
    இதுதொடர்பாக முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே கூறியது: இந்த உலகக் கோப்பையில் இலங்கை அணி சிறப்பாக ஆடும் நோக்கில் உள்ளது. கேப்டன் கருணரத்னே ஒருநாள் ஆட்டததில் ஆடிய அனுபவம் இல்லாத நிலையிலும், ஒரு பிரிவாக கட்டமைத்துள்ளார். லீக் போட்டிகளில் 5 வெற்றிகள் பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம். முதலில் அந்த இலக்கை அடைய போராடுவோம் என்றார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp