Enable Javscript for better performance
பாகிஸ்தானை சுருட்டியது மே.இ.தீவுகள் : 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தானை சுருட்டியது மே.இ.தீவுகள் : 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

    By DIN  |   Published on : 01st June 2019 12:56 AM  |   அ+அ அ-   |    |  

    wi

    விக்கெட் வீழ்த்திய ஓஷேன் தாமஸை பாராட்டும் சக வீரர்கள்.


    பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டத்தில் மே.இ.தீவுகள் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    முதலில் ஆடிய பாக். அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 13.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை கடந்து 108 ரன்களுடன் வென்றது. அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 50 ரன்கள், ஓஷேன் தாமஸ் 4 விக்கெட்டுகளுடன் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
    12-ஆவது ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்து-வேல்ஸில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    லண்டனில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. இதன் தொடர்ச்சியாக நாட்டிங்ஹாம் டிரென்ட்பிரிட்ஜில் வெள்ளிக்கிழமை முன்னாள் சாம்பியன்கள் மே.இ.தீவுகள்-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடைபெற்றது.
    இழந்த பெருமையை பெற மே.இ.தீவுகளும், 2-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் பாகிஸ்தானும் மோதின. மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில், ஆன்ட்ரெ ரஸ்ஸல், பிராவோ உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் நீண்ட நாள்களுக்கு பின் சேர்க்கப்பட்டனர்.
    டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பவுலிங்கை தேர்வு செய்தது. 
    மே.இ.தீவுகள் அபார பந்துவீச்சு
    பாகிஸ்தான் அணியால், மே.இ.தீவுகளின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இமாம் உல் ஹக் 2 ரன்களுடன் காட்ரெல் பந்துவீச்சில் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
    அதன் பின் பாக்கர் ஸமான்-பாபர் ஆஸம் இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர். எனினும் அவர்களது கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஃபகர் ஸமான் 22 ரன்களுடன் ரஸ்ஸல் பந்தில் போல்டானார். பாபரும் 22 ரன்களுக்கு ஓஷேன் தாமஸ் பந்துவீச்சில் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்தார்.
    சீட்டுக்கட்டு போல் சரிந்த விக்கெட்டுகள்
    பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து ஆடவில்லை. ஹாரிஸ் சோஹைல், கேப்டன் சர்பராஸ் அகமது 8 ரன்களோடும், முகமது ஹபீஸ் 16, இமாத் வாஸிம் 1, ஷதாப் கான் 0, ஹாஸன் அலி 1, வஹாப் ரியாஸ் 18, என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர்.
    முகமது ஆமிர் மட்டுமே 3 ரன்களுடன் களத்தில் இருந்தார். 
    இறுதியில் 21.4 ஓவர்களில் வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான்.  6 பாகிஸ்தான் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் தொடக்க வரிசை, மிடில் ஆர்டர் பேட்டிங் நிலைகுலைந்தது.
    ஓஷேன் தாமஸ் 4 விக்கெட்
    மே.இ.தீவுகள் தரப்பில் ஓஷேன் தாமஸ் அபாரமாக பந்துவீசி 27 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
    கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 3-42, ரஸ்ஸல் 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், காட்ரெல் 1-18 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
    பாக். அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் மே.இ.தீவுகள் அணி வீரரின் சிறந்த பந்துவீச்சு ஓஷேன் தாமஸ் 4-27 ஆகும்.
    மே.இ.தீவுகள் அபார வெற்றி
    106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் மே.இ.தீவுகள் தரப்பில் கிறிஸ் கெயில்-ஷாய் ஹோப் களமிறங்கினர்.
    ஒருபுறம் கெயில் அதிரடியாக ஆடிய நிலையில் ஷாய் ஹோப் 11, டேரன் பிராவோ 0 ரன்களுக்கு முகமது ஆமிர் பந்துவீச்சில் அவுட்டாயினர்.
    அப்போது 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்களை எடுத்திருந்தது மே.இ.தீவுகள். பின்னர் கெயில்-நிக்கோலஸ் பூரன் இணை ஸ்கோரை நிதானமாக உயர்த்தியது.


    கிறிஸ் கெயில் 52-ஆவது அரை சதம்
    அதிரடி வீரர் கெயில் இந்த ஆட்டத்தில் தனது 52-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். 
    3 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 50 ரன்களை விளாசிய கெயில், ஆமிர் பந்துவீச்சில், ஷதாப் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
    நிக்கோலஸ் பூரண் அதிரடி
    இளம் வீரர் நிக்கோலஸ் பூரண் 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 19 பந்துகளில் 34 ரன்களை விளாசியும், ஷிம்ரன் ஹெட்மயர் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
    13.4 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து மே.இ.தீவுகள் 108 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிக்கோலஸ் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பாக். தரப்பில் முகமது ஆமிர் 3-26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    ஓஷேன் தாமஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 
    ஷாய் ஹோப் 100 கேட்ச்கள் சாதனை
    ஓஷேன் தாமஸ் பந்துவீச்சில் பாக். வீரர் பாபர் ஆஸமை அற்புதமாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கியதின் மூலம் ஒருநாள் ஆட்டத்தில் தனது 100-ஆவது கேட்சை பதிவு செய்தார், மே.இ.தீவுகள் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப். இந்த ஆட்டத்தில் மொத்தம் 4 கேட்ச்களை பிடித்தார் ஹோப்.


    சுருக்கமான ஸ்கோர்
    பாகிஸ்தான் 
    105 ஆல் அவுட்,
    ஃபகர் ஸமான் 22,
    பாபர் ஆஸம் 22
    பந்துவீச்சு: 
    ஓஷேன் தாமஸ் 4-27, 
    ஹோல்டர் 3-42.
    மே.இ.தீவுகள்: 108/3,
    கிறிஸ் கெயில் 50, 
    நிக்கோலஸ் 34,
    பந்துவீச்சு:
    முகமது ஆமிர் 3-26.


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp