இன்று சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம்: லிவர்பூல்-டாட்டன்ஹாம் மோதல்

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎப்ஏ) சார்பில் மாட்ரிட்டில் சனிக்கிழமை நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் போட்டி இறுதி ஆட்டத்தில்
இன்று சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம்: லிவர்பூல்-டாட்டன்ஹாம் மோதல்

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎப்ஏ) சார்பில் மாட்ரிட்டில் சனிக்கிழமை நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் போட்டி இறுதி ஆட்டத்தில் லிவர்பூல்-டாட்டன்ஹாம் அணிகள் மோதுகின்றன.
பிரபல கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் முக்கிய போட்டி சாம்பியன்ஸ் லீக் ஆகும். நிகழாண்டு இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் அணிகளான லிவர்பூல்-டாட்டன்ஹாம் ஆகியவை தகுதி பெற்றுள்ளன.
7 ஆண்டுகளாக லிவர்பூல் அணியும், 11 ஆண்டுகளாக டாட்டன்ஹாம் அணியும் பெரிய போட்டியில் பட்டம் வெல்ல காத்துள்ளன. 
ப்ரீமியர் லீக் பட்டத்தை லிவர்பூல் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மான்செஸ்டர் சிட்டி கைப்பற்றியது. இதனால் லிவர்பூல் அணி ஏமாற்றம் அடைந்தது.
சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் பலம் வாய்ந்த மெஸ்ஸியின் பார்சிலோனா அணியை வென்றது லிவர்பூல், மற்றொரு அரையிறுதியில் நெதர்லாந்து சாம்பியன் அஜாக்ஸ் எஃப்சியை வீழ்த்தியது டாட்டன்ஹாம்.
இரு அணிகளும் மோதுவதால் இறுதி ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் மைதானத்தில் 32000 பார்வையாளர்கள் அமரலாம். மேலும் பாதுகாப்பு பணியில் 4700 பேர் ஈடுபடுகின்றனர். ஐரோப்பாவின் சாம்பியன் கிளப் யார் என்பதை சனிக்கிழமை அறியலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com