ஆஸி. அணிக்கு பின்னடைவு: புதிய ஆல்-ரவுண்டர் மாற்று வீரராக 'திடீர்' அழைப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்று ஆல்-ரவுண்டர் அழைக்கப்பட்டுள்ளதாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்தார். 
ஆஸி. அணிக்கு பின்னடைவு: புதிய ஆல்-ரவுண்டர் மாற்று வீரராக 'திடீர்' அழைப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்று ஆல்-ரவுண்டர் அழைக்கப்பட்டுள்ளதாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்தார். 

உலகக் கோப்பையில் இந்தியாவுடனான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேசும்போது,

ஸ்டாய்னிஸ்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் பாகிஸ்தானுடனான போட்டியில் பங்கேற்க மாட்டார். அடுத்த இரு தினங்களில் அவருடைய உடல்தகுதி குறித்து முழு விவரம் தெரியும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் அழைக்கப்பட்டுள்ளார். அவரும் இன்னும் இரு தினங்களில் அணியில் இணைவார் என்று தெரிவித்தார்.

ஐசிசி விதிகளின் படி உலகக் கோப்பை தொடரின் மத்தியப் பகுதியில் காயமடைந்த வீரருக்கு மாற்று வீரரை தேர்வு செய்துகொள்ளலாம். அதன்பிறகு காயமடைந்த வீரர் குணமடைந்துவிட்டால் அணியில் மீண்டும் சேர்க்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com