சுடச்சுட

  

  ஓய்வு குறித்து புகழ்ந்த அக்தருக்கு யுவராஜ் அன்பு மழை

  By Raghavendran  |   Published on : 12th June 2019 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  akthar_yuvraj

   

  ஓய்வு குறித்து புகழந்து விடியோ வெளியிட்ட பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தருக்கு யுவராஜ் சிங் பதிலளித்துள்ளார். 

  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரபல நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் அறிவித்தார். இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்து யுவராஜ் திறமை குறித்து புகழாரம் சூட்டி வருகின்றனர்.

  இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர், தனது யூடியூப் பக்கத்தில் யுவராஜ் சிங் குறித்து புகழந்து பேசி விடியோ வெளியிட்டார். அதில், யுவராஜைப் போன்ற திறமையான இடதுகை பேட்ஸ்மேனை இந்தியா பெற்றிருக்கவில்லை. அவர் ஒரு ராக் ஸ்டார், எனக்கு நல்ல நண்பரும் கூட. சிறந்த தேசப்பற்று கொண்டவர். 

  2003 உலகக் கோப்பை ஆட்டத்தில் முதன்முறையாக யுவராஜுக்கு எதிராக பந்துவீசும் வாய்ப்பு அமைந்தது. அந்த போட்டியில் அவர் சிறப்பாக ஆடினார். கிரிக்கெட் மீதான யுவராஜின் புரிதல் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல 2011 உலகக் கோப்பை தொடரில் யுவராஜின் ஆட்டம் என்றென்றைக்கும் பேசப்படும்.

  ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியது மிக அற்புதமான தருணம். அதுபோன்ற ஒரு ஆட்டத்தை நான் இதுவரை கண்டதில்லை. அவர் எப்போது களமிறங்கினாலும் இந்திய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே விளையாடுவார். யுவராஜை விரைவில் ஆட்டமிழக்கச் செய்ய நாங்கள் எப்போதும் திட்டமிடுவோம். ஏனென்றால் யுவராஜ் சிங் சிறந்த மேட்ச் வின்னர் என்று பேசினார்.

  இதுகுறித்து யுவராஜ் சிங், உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் ஒவ்வொரு முறையும் பந்துவீச ஓடிவரும்போது எனக்கு மிகுந்த அச்சமாக இருக்கும். உங்களை சந்திக்க நான் தைரியத்தை வரவழைத்துக்கொள்வேன். இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். நமக்கு இடையே சிறந்த போட்டி நிலவியுள்ளது. அந்த தருணங்கள் மிகவும் இனிமையானவை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai