எல்இடி பெயில்ஸ்களை மாற்ற முடியாது: ஐசிசி
By DIN | Published On : 12th June 2019 01:03 AM | Last Updated : 12th June 2019 01:05 AM | அ+அ அ- |

உலகக் கோப்பை போட்டியின் மத்தியில் ஸ்டம்புகளில் எல்இடி பெயில்ஸ்களை மாற்ற முடியாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் பந்து படும் போது, எல்இடி பெயில்ஸ்கள் ஒளிர்கின்றன. இது டிவி நடுவர்களின் பணியை எளிதாகியுள்ளது. ஆனால் பலமுறை இதில் முடிவுகள் தெளிவாக இல்லை என தகவல்கள் வெளியாகின. இந்த பெயில்ஸ்களை மாற்ற வேண்டும் என விராட் கோலி, ஆஸி. கேப்டன் ஆரோன் பின்ச் கடந்த ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினர்.
தற்போது உலகக் போட்டிகள் மத்திய கட்டத்தை எட்டியுள்ளன. இடையில் எல்இடி பெயில்ஸ்களை மாற்ற முடியாது. அவ்வாறு செய்தால், போட்டியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி விடும்.
10 அணிகள் ஆடும் 48 ஆட்டங்களிலும் ஓரே கருவி தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் ஸ்டம்புகளின் மீது 10 முறை பந்து பட்டும், பெயில்கள் கீழே விழவில்லை. அதில் ஏராளமான வயர்கள் பயன்படுத்தப்பட்டு, கனமாக உள்ளதால், பெயில்கள் விழுவதில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2015 உலகக் கோப்பை முதல் பல்வேறு ஐசிசி போட்டிகளில் இந்த பெயில்ஸ்களே பயன்பாட்டில் உள்ளன எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.