பலம் வாய்ந்த ஆஸி.யை வீழ்த்துமா பாகிஸ்தான்?இன்று மோதல்

பலம் வாய்ந்த ஆஸி.யை வீழ்த்துமா பாகிஸ்தான்?இன்று மோதல்

வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துமா பாகிஸ்தான் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துமா பாகிஸ்தான் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொடர்ந்து 2 வெற்றிகளை பதிவு செய்த ஆஸ்திரேலியா, மூன்றாவது ஆட்டத்தில் இந்தியாவிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் மே.இ,தீவுகளிடம் மோசமான தோல்வியைப் பெற்றிருந்தது. அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கையுடன் நடைபெற்ற ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
நான்காவது ஆட்டத்தில் மோதல்:
இந்நிலையில் நான்காவது ஆட்டத்தில் 2 அணிகளும் மோதுகின்றன.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸி. பந்துவீச்சு முற்றிலும் செயலிழந்து விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்புக்கு தள்ளப்பட்டனர். பேட்ஸ்மேன்கள் மட்டுமே வெற்றிக்காக போராடினர். வார்னர், ஸ்மித், காஜா, அலெக்ஸ் கரே ஆகியோர் பேட்டிங்களில் பக்கபலமாக உள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 5-0 என ஓயிட் வாஷ் செய்தது ஆஸி. 
கணிக்க முடியாத அணி: அதே நேரத்தில் கணிக்க முடியாத அணி என அழைக்கப்படும் பாகிஸ்தான் தனது பெயரை தக்க வைத்துள்ளது. மே.இ.தீவுகளுக்கு எதிராக மோசமான தோல்வி, இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி என அதன் செயல்பாடு கணிக்க முடியாமல் உள்ளது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்பட்டது. 
இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய அதே ஆட்டத்தை ஆஸி.க்கு எதிராகவும் பாகிஸ்தான் ஆட வேண்டும். பாகிஸ்தானில் பாபர் ஆஸம், முகமது ஹபீஸ், சர்பராஸ் ôகியோர் பேட்டிங்கில் ஜொலித்து வருகின்றனர்.
போட்டி நடைபெறும் டான்டனில் வானிலை மந்தமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறிது உதவியாக இருக்கும் எனத் தெரிகிறது. 
இன்றைய ஆட்டம்: 
பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா,
இடம்-டான்டன்,
நேரம்-மதியம் 3.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com