சுடச்சுட

  
  ind

  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் ஆட்டம், நாட்டிங்ஹாமில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 
  இந்தியாவைப் பொருத்த வரையில், இதுவரை தான் விளையாடிய இரு ஆட்டங்கலிலுமே வெற்றி கண்டு தற்போது ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கியுள்ளது. 
  அதில் ஒரு வெற்றி, நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. 
  மறுபுறம், நியூஸிலாந்து அணி ஹாட்ரிக் வெற்றியைக் கடந்து 4-ஆவது வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் இந்தியாவை எதிர்கொள்கிறது. சர்வதேச போட்டிகளில் அந்த அணி இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வருகிறது. 
  இந்திய அணியில் காயம் காரணமாக ஷிகர் தவன் விலகியது, அணிக்கு சற்றே பின்னடைவாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி காட்டிய அவர், 3 ஆட்டங்களில் பங்கேற்க இயலாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
  ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து பேட்டிங்கை தொடங்க, ஷிகர் தவன் இடத்தில் லோகேஷ் ராகுல் நியமிக்கப்படலாம். 
  லோகேஷ் ராகுலுக்கு தொடக்க வீரர்களில் ஒருவராக வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில், 4-ஆவது இடத்துக்கான போட்டி விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் இடையே ஏற்படும். 
  விஜய் சங்கர் ஆல் ரவுண்டராக அசத்தும் நிலையில், தினேஷ் கார்த்திக் அனுபவமிக்க வீரராக பக்குவம் காட்டுகிறார். இருவருக்குமே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், கேதார் ஜாதவ் தனக்கான இடத்தை இழப்பார்.  
  வானிலை மாற்றம் காரணமாக ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாற வாய்ப்பு இருப்பதால், மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருவரில் ஒருவருக்குப் பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்படலாம். 
  அச்சுறுத்தும் வானிலை: இந்நிலையில், இந்தியா-நியூஸிலாந்து ஆட்டம் நடைபெற இருக்கும் நாளில் நாட்டிங்ஹாமின் வானிலை மேகமூட்டத்துடன், மழைக்கு உகந்ததாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, வானிலை காரணமாக போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கலாம் எனவும் தெரிகிறது.
  இன்றைய ஆட்டம்: 
  இந்தியா-நியூஸிலாந்து
  இடம்: நாட்டிங்ஹாம்
  நேரம்: மதியம் 3 மணி
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai