சுடச்சுட

  

  விக்கெட்டுகளை வீழ்த்துவதே இந்தியாவுக்கு எதிராக எங்களின் திட்டம்: ஃபெர்கூஸன்

  By Raghavendran  |   Published on : 13th June 2019 11:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Lockie_Ferguson

   

  இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவதுதான் எங்களின் திட்டம் என்று நியூஸிலாந்து பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்கூஸன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

  இந்திய அணி மிகவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த நாங்களும் நிதானமாக இருக்கவேண்டியது மிக அவசியம். இந்திய அணியின் விக்கெட்டுகளை சரியான இடைவேளையில் வீழ்த்துவது மட்டுமே நாங்கள் வெற்றிபெற முக்கியமாக இருக்கும். அதுதான் எங்களின் திட்டம்.

  இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்திறனுடன் உள்ளனர். மேலும் இங்கிலாந்து ஆடுகளத்தில் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடி பலகாலம் ஆகிறது. எனவே போதிய அழுத்தம் அளிப்பதன் மூலம் இந்திய அணியை எளிதில் வீழ்த்தி விட முடியும் என்று தெரிவித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai