ஆஸ்திரேலியா வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 
ஆஸ்திரேலியா வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 
இங்கிலாந்தின் டான்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் விளாசியது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 45.4 ஓவர்களில் 266 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வீழ்ந்தது. 
ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 107 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதேபோல் பாகிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக இமாம் உல் ஹக் 53 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியாவின் பேட்ரிக் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். வார்னர் ஆட்டநாயகன் ஆனார்.
முன்னதாக, இரு அணிகளின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆஸ்திரேலியாவில் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பாவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன், காயமடைந்த மார்கஸ் ஸ்டாய்னிஸýக்குப் பதிலாக ஷான் மார்ஷ் சேர்க்கப்பட்டிருந்தனர். 
அதேபோல் பாகிஸ்தான் அணியில் லெக் ஸ்பின்னர் ஷாதாப் கானுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார். 
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீசத் தீர்மானித்தது. ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபிஞ்ச்-டேவிட் வார்னர் களமிறங்கினர். அருமையாக ஆடிய இந்தக் கூட்டணி விக்கெட்டை இழக்காமல் ஸ்கோர்களை குவித்தது. 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 82 ரன்கள் விளாசியிருந்த ஃபிஞ்ச், 23-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 146 ரன்களை குவித்திருந்தது ஃபிஞ்ச்-வார்னர் கூட்டணி. அடுத்து களம் கண்ட ஸ்டீவன் ஸ்மித் 10 ரன்களில் நடையைக் கட்ட, மறுமுனையில் சதம் கடந்தார் டேவிட் வார்னர். ஸ்மித்தை தொடர்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 111 பந்துகளை சந்தித்த வார்னர், 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் உஸ்மான் கவாஜா 18, ஷான் மார்ஷ் 23, கோல்டர் நீல் 2, பேட்ரிக் 2, அலெக்ஸ் கேரி 20, ஸ்டார்க் 3 என விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. 
49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 5, ஷாஹீன் அப்ரிடி 2, ஹசன் அலி, வஹப் ரியாஸ், முகமது ஹஃபீஸ் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். 
பாக். தடுமாற்றம்: இதையடுத்து 308 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய பாகிஸ்தானில், இமாம் உல் ஹக் மட்டும் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எஞ்சியவர்களில் முகமது ஹஃபீஸ் 46, வஹாப் ரியாஸ் 45, கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 40 ரன்கள் அடிக்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. ஃப்கார், ஷோயப், ஆமிர் டக் அவுட்டாகினர். 
இதனால், 45.4 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான். ஆஸ்திரேலியாவின் பேட்ரிக் 3, ஸ்டார்க், ரிச்சர்ட்சன் தலா 2, கோல்டர் நீல், ஃபிஞ்ச் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
சுருக்கமான ஸ்கோர்
ஆஸ்திரேலியா 
49 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 307 
வார்னர்-107, ஃபிஞ்ச்- 82, மேக்ஸ்வெல் 20
பந்துவீச்சு: ஆமிர்-5/30, ஷாஹீன்-2/70, வஹாப்-1/44
பாகிஸ்தான் 
45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 266
இமாம்- 53, ஹஃபீஸ்- 46, வஹாப்- 45
பந்துவீச்சு: பேட்ரிக்-3/33, ஸ்டார்க்-2/43, ரிச்சர்ட்சன்-2/62
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com