செய்திகள் சில வரிகளில்..

    வில் வித்தை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் இந்திய ஆடவர் ரிகர்வ் பிரிவு அணி டோக்கியோ ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. தருண்தீப் ராய், அதானு தாஸ், பிரவீண் ஜாதவ் ஆகியோர் அடங்கிய அணி 5-3 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி அந்த வாய்ப்பை பெற்றுள்ளது.
    மெர்ஸிடஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹண் போபண்ணா/கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் இணை, 6-4, 3-6, 10-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மைக் பிரயன்/ பாப் பிரையன் ஜோடியை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 
    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அணியின் உதவிப் பணியாளர்களின் ஒப்பந்தம் உலகக் கோப்பை போட்டியுடன் நிறைவடையும் நிலையில், அதை மேலும் 45 நாள்களுக்கு பிசிசிஐ நிர்வாகக் குழு நீட்டித்துள்ளது.
    யுவராஜ் சிங் போன்ற வீரருக்கு ஒரு ஆட்டத்தின் மூலம் முறையாக பிரியாவிடை அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
    இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனை கேலி செய்யும் விதமாக பாகிஸ்தான் தொலைக்காட்சியில் வெளியான உலகக் கோப்பை கிரிக்கெட் விளம்பரத்துக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்ஸா கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com