Enable Javscript for better performance
பிஃபா மகளிர் உலகக் கோப்பை: நைஜீரியா, ஜெர்மனி, பிரான்ஸ் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    பிஃபா மகளிர் உலகக் கோப்பை: நைஜீரியா, ஜெர்மனி, பிரான்ஸ் வெற்றி

    By DIN  |   Published on : 14th June 2019 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fifa


    பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டங்களில் நைஜீரியா, ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
    நைஜீரியா-கொரிய குடியரசு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்பிரிக்க சாம்பியன் நைஜீரியா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. கொரிய வீராங்கனை டிஓய் கிம் சேம்சைட் கோலடித்தார் அதைத் தொடர்ந்து நைஜீரியாவின் ஓஷோலா ஆகியோர் கோலடித்தனர். 
    அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதின. அதில் ஜெர்மனியின் டப்ரீட்ஸ் அடித்த ஓரே கோலால் 1-0 என ஸ்பெயினை வென்றது ஜெர்மனி. ஆட்டத்தில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தும் பதில் கோலடிக்க முடியவில்லை.
    போட்டியை நடத்தும் பிரான்ஸ்-நார்வே அணிகள் இடையே நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என வென்றது. பிரான்ஸ் தரப்பில் கவ்வின், லி சாமர் கோலடித்தனர். நார்வே தரப்பில் ரெனார்ட் ஓரே கோலடித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai