சுடச்சுட

  

  உலக கோப்பை: இங்கிலாந்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி 213 ரன்கள் இலக்கு 

  By DIN  |   Published on : 14th June 2019 07:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  root_wi

   

  சவுதாம்டன்: நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி 213 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெள்ளியன்று இங்கிலாந்து மற்றும்மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 19-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

  தொடக்க வீரர் எவின் லூயிஸ் 2 ரன்களில் வோக்ஸின் அற்புதமான பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கிறிஸ் கெயில். பவுண்டரிகளை அவ்வப்போது அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். வோக்ஸ் பந்துவீச்சில் இவர் அளித்த கேட்சைத் தவறவிட்டார் வுட். மறுமுனையில் ஷாய் ஹோப் நிதானமாக விளையாடி வர, அதிரடியாக விளையாடிய கெயில், 36 ரன்களில் பிளெங்கெட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஷாய் ஹோப் 30 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வுட் பந்துவீச்சில் வெளியேறினார். 

  இதன்பிறகு ஜோடி சேர்ந்த பூராணும் ஹெட்மையரும் பந்துகளை வீணடிக்காமல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 89 ரன்கள் சேர்த்த இவர்களைப் பிரித்தார் ஜோ ரூட். ஹெட்மையர் 39 ரன்களில் எதிர்பாராதவிதமாக ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. ரூட் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடித்த ஹோல்டர் அடுத்தப் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு இரண்டு சிக்ஸர்கள் அடித்த ரஸ்ஸல், வுட் பந்துவீச்சில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.  மறுபுறம் நிலைத்து ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த நிகோலஸ் பூரன் 63 ரன்னில் அவுட் ஆனார். 

  அவரை தொடர்ந்து,  ஷெல்டன் காட்ரெல் ரன் எதுவும் எடுக்காமலும், பிராத்வெய்ட் 14 ரன்னிலும், ஷனோன் கேப்ரியல்  ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

  இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 44.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 212 ரன்களை எடுத்துள்ளது.

  இங்கிலாந்து அணி சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர மற்றும் மார்க்வுட்  தலா 3 விக்கெட்களும், ஜோ ரூட்  2 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பிளங்கெட் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

  இதனைத் தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai