எப்ஐஎச் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான்

எப்ஐஎச் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா.
எப்ஐஎச் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான்


எப்ஐஎச் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா.
கடந்த ஜகார்த்தா ஆசியப் போட்டியில் தங்கம் வென்றிருந்தால் நேரடியாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கும். ஆனால் அதில் ஜப்பான் தங்கம் வென்றதின் மூலம் நேரடி தகுதி பெற்றுள்ளது. இதனால் ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டமானஎப்ஐஎச் சீரிஸ் பைனல்ஸ் போட்டியில் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா.
புவனேசுவரத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் 3 ஆட்டங்களிலும் வென்று முதலிடத்தைப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 
அதே நேரத்தில் ஜப்பான் அணி கிராஸ் ஓவர் ஆட்டத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதியில் கணிக்க முடியாத ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது இந்தியா. தலைமை பயிற்சியாளராக கிரஹாம் ரீட் நியமிக்கப்பட்ட பின், உள்ளூரில் இந்தியா பங்கேற்கும் பெரிய போட்டி இதுவாகும். மன்ப்ரீத் சிங் தலைமையில் இந்திய அணி இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கிரஹாம் ரீட் கூறியதாவது: 
நமது வீரர்கள் கோலடிக்க ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றுவதில் தவறி விடுகின்றனர். இந்த அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் தற்காப்பில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றார்.
ஆசிய சாம்பியன்ஸ் போட்டி, சுல்தான் அஸ்லன் ஷா போட்டிகளில் ஜப்பானை வென்றிருந்தாலும், இந்திய அணிக்கு கடும் சவால் நிலவியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com