பிஃபா மகளிர் உலகக் கோப்பை: நைஜீரியா, ஜெர்மனி, பிரான்ஸ் வெற்றி

பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டங்களில் நைஜீரியா, ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

நைஜீரியா-கொரிய குடியரசு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்பிரிக்க சாம்பியன் நைஜீரியா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. கொரிய வீராங்கனை டிஓய் கிம் சேம்சைட் கோலடித்தார் அதைத் தொடர்ந்து நைஜீரியாவின் ஓஷோலா ஆகியோர் கோலடித்தனர். 
அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதின. அதில் ஜெர்மனியின் டப்ரீட்ஸ் அடித்த ஓரே கோலால் 1-0 என ஸ்பெயினை வென்றது ஜெர்மனி. ஆட்டத்தில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தும் பதில் கோலடிக்க முடியவில்லை.
போட்டியை நடத்தும் பிரான்ஸ்-நார்வே அணிகள் இடையே நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என வென்றது. பிரான்ஸ் தரப்பில் கவ்வின், லி சாமர் கோலடித்தனர். நார்வே தரப்பில் ரெனார்ட் ஓரே கோலடித்தார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com