இனிதான் ஆரம்பம்: கே.எல்.ராகுல்

ஷிகர் தவன் காயத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக துவக்க வீரராக களமிறக்கப்பட்ட கே.எல்.ராகுல்...
இனிதான் ஆரம்பம்: கே.எல்.ராகுல்

ஷிகர் தவன் காயத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக துவக்க வீரராக களமிறக்கப்பட்ட கே.எல்.ராகுல் 78 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து நிலையான தொடக்கத்தை ஏற்படுத்தினார். இதற்கு சச்சின் டெண்டுல்கர், ஸ்ரீகாந்த் போன்ற முன்னணி வீரர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், தனது ஆட்டம் குறித்து கே.எல்.ராகுல் கூறியதாவது:

எனது வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரராக இதுபோன்ற ஒரு வாய்ப்புகாக தான் அனைவரும் காத்திருப்பார்கள். அவ்வகையில் முதல் 3 இடங்களில் பேட் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இனிதான் என்னுடைய ஆட்டம் ஆரம்பம்.

இந்திய அணியில் துவக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால், அந்த இடங்களில் எளிதில் மாற்றம் வராது. இந்த வாய்ப்பில் எனக்கு நானே 10-க்கு 6 மதிப்பெண்கள் அளிப்பேன். இந்த நம்பிக்கையை அடுத்த போட்டிகளுக்கும் கொண்டு செல்லவேன் என்று நம்புகிறேன். 

எந்த அணியாக இருந்தாலும், யார் பந்துவீச்சாளராக இருந்தாலும், முதலில் சில ஓவர்களில் தடுப்பாட்டம் ஆடுவதுதான் மிகச்சிறந்தது. ஏனென்றால் அப்போது பந்துகளை எதிர்கொள்வது மிகக் கடினமாக இருக்கும். பந்தை சரியாக கணிக்க முடிந்த பின்பு இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். 

இருந்தாலும், முதலில் சில பவுண்டரிகளை அடிப்பது தான் துவக்க பேட்ஸ்மேனுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அடுத்த 2 போட்டிகளிலும் தவன் களமிறங்க வாய்ப்பில்லை என்பதால், ராகுல் தன்னை நிரூபிக்க இது சிறப்பான வாய்ப்பாக அமையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com