துளிகள்...
By DIN | Published On : 18th June 2019 12:58 AM | Last Updated : 18th June 2019 12:58 AM | அ+அ அ- |

ஐஎஸ்எல் அணியான அதலெடிக் கொல்கத்தாவில் இருந்து விலகி தனது முன்னாள் அணியான பெங்களூரு எப்சியில் மீண்டும் இணைந்தார் நட்சத்திர மிட்பீல்டர் லிங்டோ. வரும் 2020 ஆம் ஆண்டு வரை அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லிங்டோவின் அபார ஆட்டத்தில் 3 முக்கிய போட்டிகளில் கோப்பை வென்றது பெங்களூரு.
பொறுப்புடன் ஆடுங்கள், இல்லையென்றால் தாராளமாக வெளியேறலாம் என பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாரிஸ் சாம்பியன் அணியான பிஎஸ்ஜியின்தலைவர் நாஸர் அல் கேலாஃபி.
மும்பையில் நடைபெற்று வரும் 12-ஆவது மேயர் கோப்பை செஸ் போட்டியில் தஜிகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் பாரூக் அமனடோவ் சாம்பியன் பட்டம் வென்றார். ஆர்மீனிய வீரர் மானுவேல் பெட்ரோஸியன் இரண்டாம் இடம் பெற்றார்.
உலகக் கோப்பையில் தங்கள் மகன் ஹார்திக் பாண்டியாவின் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக அவரது பெற்றோர் ஹிமான்ஷு பாண்டியா, நளினி ஆகியோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.