பாகிஸ்தான் அணியில் பிரிவினை: அந்நாட்டு ஊடகங்கள் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குழுக்களாக பிரிந்து கிடப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
பாகிஸ்தான் அணியில் பிரிவினை: அந்நாட்டு ஊடகங்கள் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குழுக்களாக பிரிந்து கிடப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் 7-0 என்ற வெற்றிக் கணக்கையும் நீட்டித்தது. 

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் மிகுந்த கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக கேப்டன் சர்ஃப்ராஸ் விட்ட கொட்டாவி தான் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் போக்காக இருந்ததாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் வீரர்கள் உட்பட பலர் பாகிஸ்தான் தோல்வியை சாடியுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி குழுக்களாக பிரிந்து கிடப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தற்போது புது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இதுகுறித்து கேப்டன் சர்ஃப்ராஸ், தன்னை யாரும் மதிப்பதில்லை என்று கடிந்துகொண்டதாகவும் கூட தெரிவித்துள்ளன. குறிப்பாக முகமது ஆமிர், இமாத் வாசிம் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோரது தலைமையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குழுக்களாக பிரிந்து கிடப்பதாக பெயர் வெளியிட விரும்பாத வீரர்கள் கூறியுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

ஆனால், ஊடகங்களின் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக முன்னாள் கேப்டன் மொயின் கான், பெரிய தொடர்களில் பாகிஸ்தான் ஜொலிக்காத போது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது சகஜம் தான் என்று பதிலடி அளித்துள்ளார். ஃபீல்டிங்கில் மட்டுமே பாகிஸ்தான் அணி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com