சுடச்சுட

  

  அர்ஜுன் டெண்டுல்கரின் அசத்தல் 'ஸ்விங்': தலைவணங்கிய 'லார்ட்ஸ்' மைதானம்

  By Raghavendran  |   Published on : 19th June 2019 12:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arjun_tendulkar

   

  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனின் அசத்தல் ஸ்விங் பந்துவீச்சுக்கு தலைவணங்குவதாக லார்ட்ஸ் மைதானம் ட்வீட் செய்துள்ளது.

  தந்தையை போன்று அல்லாமல் அர்ஜுன் டெண்டுல்கர் வேகப்பந்துவீச்சாளராக உருவாகியுள்ளார். சமீபத்தில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியின் போது பந்துவீசிய விடியோப் பதிவுகள் வைரலானது.

  இந்நிலையில், இங்கிலாந்தில் புகழ்பெற்ற எம்சிசி யங் கிரிக்கெட்டர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன் வீசிய பந்தில், சர்ரே 2-ஆவது லெவன் அணியின் நாதன் டைலி க்ளீன் போல்டான விடியோப் பதிவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

  அதில், அர்ஜுன் டெண்டுல்கருக்கு தலைவணங்குகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai