2015 தோல்விக்கு பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா? இன்று நியூஸி.யுடன் மோதல்

2015 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூஸி.யிடம் பெற்ற தோல்விக்கு தற்போது பழி தீர்க்குமா தென்னாப்பிரிக்கா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2015 தோல்விக்கு பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா? இன்று நியூஸி.யுடன் மோதல்


2015 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூஸி.யிடம் பெற்ற தோல்விக்கு தற்போது பழி தீர்க்குமா தென்னாப்பிரிக்கா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2 அணிகள் இடையிலான ஆட்டம் பர்மிங்ஹாமில் புதன்கிழமை நடைபெறுகிறது. புள்ளிகள் பட்டியலில் நியூஸி. 2-ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 8-ஆவது இடத்திலும் உள்ளன. 
நியூஸிலாந்து தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது. இந்தியாவுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அதே நேரம் தென்னாப்பிரிக்கா தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்து, 1 வெற்றியை கண்டது. ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 
தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சு ஸ்டெய்ன், அன்ரிச் நார்ஜே ஆகியோர் காயத்தால் வலுவிழந்துள்ளது. அதே நேரத்தில் லுங்கி கிடி மீண்டும் திரும்பியுள்ளது ஆறுதலை தரும்.
பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானம் சுழற்பந்து வீச்சு உதவும் என்பதால், இம்ரான் தாஹிர், முக்கிய பங்கு வகிப்பார். 
பேட்டிங்கில் டி காக், டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக ஆடி வருகின்றனர். ஆம்லா கடந்த ஆட்டத்தில் தான் மீண்டும் பார்முக்கு திரும்பினார்.
நியூஸிலாந்து அணியில் கேன் வில்லியம்ஸன், ராஸ் டெய்லர், காலின் மன்றோ, கப்டில் என வலுவான பேட்டிங் வரிசை காத்துள்ளது.
பந்துவீச்சில் டிரென்ட் பெளல்ட், ஜேம்ஸ் நீஷம், கிராண்ட்ஹோம், இஷ் சோஜி, சான்ட்நர் ஆகியோர் தங்கள் பங்கை சீராக செய்வர் எனத் தெரிகிறது.
அடுத்த 4 ஆட்டங்களில் வென்றால் தான் அரையிறுதி குறித்து நினைக்க முடியும் என்பதால் தென்னாப்பிரிக்கா கடுமையாக போராடும். அதே நேரம் நியூஸிலாந்து அணி நெருக்குதல் இன்றி ஆடும். 
இன்றைய ஆட்டம்
நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா
இடம்: பர்மிங்ஹாம், நேரம்: மதியம் 3.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com