கடவுளே எங்களைக் காப்பாற்றுங்கள்: புள்ளிப்பட்டியலுடன் பிரக்யான் ஓஜா வேண்டுதல்

புள்ளிப்பட்டியல் ஒன்றை பகிர்ந்துள்ள பிரக்யான் ஓஜா, கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டுள்ளார்.
கடவுளே எங்களைக் காப்பாற்றுங்கள்: புள்ளிப்பட்டியலுடன் பிரக்யான் ஓஜா வேண்டுதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடர்பான புள்ளிப்பட்டியல் ஒன்றை பகிர்ந்துள்ள பிரக்யான் ஓஜா, கடவுள் தான் பந்துவீச்சாளர்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டுள்ளார்.

கிரிக்கெட், சமீபகாலங்களில் பிட்ச் மற்றும் விதிகள் என பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகி வருகிறது. அதிகளவிலான ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு பல மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

இதனால் ஒரு காலத்தில் 200 முதல் 250 வரையிலான ஸ்கோர்கள் கடின இலக்காக தெரிந்தது சென்று, 400 ரன்களையும் எளிதில் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 80 சதவீதம் பேட்டிங்குக்கு சாதகமாகவும், 20 சதவீதம் மட்டுமே பந்துவீச்சுக்கு சாதகமாகவும் உள்ளது. எனவே பந்துவீச்சாளர்கள் தான் பெரிதும் அவதிப்படும் சூழலும் நிலவுகிறது. 

இந்நிலையில், கடவுள் தான் பந்துவீச்சாளர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற வேண்டுதலுடன் புள்ளிப்பட்டியல் ஒன்றையும் பிரக்யான் ஓஜா பகிர்ந்துள்ளார். கடந்த 1979 முதல் நடப்பு உலகக் கோப்பை தொடர் வரை விளாசப்பட்ட சிக்ஸர்களின் புள்ளிப்பட்டியலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நடப்பு உலகக் கோப்பையில் சராசரியாக ஒரு போட்டிக்கு 9 சிக்ஸர்கள் விதம் 21 ஆட்டங்களுக்குள்ளாக 186 சிக்ஸர்கள் பறந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 2015 உலகக் கோப்பையில் மொத்தம் நடைபெற்ற 48 ஆட்டங்களில் சராசரியாக ஒரு போட்டிக்கு 10 சிக்ஸர்கள் விதம் 463 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன. இது 2011 உலகக் கோப்பையைக் காட்டிலும் சுமார் 2 மடங்கு அதிகமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com