2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட்

இங்கிலாந்தின் பிர்மிங்கமில் 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டை சேர்க்க காமன்வெல்த் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.  
2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட்


இங்கிலாந்தின் பிர்மிங்கமில் 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டை சேர்க்க காமன்வெல்த் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.  

கடந்தாண்டு நவம்பர் மாதம் காமன்வெல்த் கூட்டமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) 2022 காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. 

இந்த நிலையில், ஐசிசி மற்றும் இசிபி வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட காமன்வெல்த் கூட்டமைப்பு, 2022-இல் இங்கிலாந்தின் பிர்மிங்கமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைத்துள்ளது. காமன்வெல்த் கூட்டமைப்பின் இந்த முடிவுக்கு ஐசிசி வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இதன்மூலம், காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு, காமன்வெல்த் கூட்டமைப்பின் 71 உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே மீதமிருக்கிறது. இதற்கு 51 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். இதற்கான வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும். 

ஆனால், இது வெறும் சம்பிரதாய நடைமுறையாகவே பார்க்கப்படுகிறது. அதனால், இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலும் ஒப்புதல் கிடைத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.      

முன்னதாக, 1998-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆடவர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. அப்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தங்கம் வென்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெள்ளி வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com