அரையிறுதிக்கான போட்டியில் பாகிஸ்தான்

தென்னாப்பிரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், அரையிறுதிக்கு போட்டியில் தொடர்ந்து நீடித்துள்ளது.
அரையிறுதிக்கான போட்டியில் பாகிஸ்தான்

தென்னாப்பிரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், அரையிறுதிக்கு போட்டியில் தொடர்ந்து நீடித்துள்ளது.
முதலில் ஆடிய பாகிஸ்தான்308/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 259/9 ரன்களை மட்டுமே எடுத்து அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் உள்ள தென்னாப்பிரிக்காவும்,  பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் இமாம்உல் ஹக், ஃபகர் ஸமான் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர்.
இருவருமே தலா 44 ரன்களுடன் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். அப்போது 20 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 98 ரன்களை எடுத்திருந்தது பாகிஸ்தான்.
பின்னர் பாபர் ஆஸம்-முகமது ஹபீஸ் இணை ரன்களை சேர்த்தது. எனினும் ஹபீஸ் 20 ரன்களுடன் மார்க்ரம் பந்தில் எல்பிடபிள்யு ஆனார்.
பாபர் 14-ஆவது அரைசதம்:ஒருமுனையில் சிறப்பாக ஆடிய பாபர் ஆஸம் தனது 14-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். அவரும் ஹாரிஸ் சோஹைலும் இணைந்து 50 ரன்களை சேர்த்தனர். 37.5 ஓவர்களில் பாக். ஸ்கோர் 200-ஐ கடந்தது. 7 பவுண்டரியுடன் 80 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய பாபரை அவுட்டாக்கினார் பெலுக்வயோ.
ஹாரிஸ் சோஹைல் அதிரடி: ஹாரிஸ் சோஹைல் அதிரடியாக ஆடி தனது 11-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். 
இமாத் வாசிம் 15 பந்துகளில் 23 ரன்களை விளாசி, லுங்கி கிடி பந்தில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வஹாப் ரியாஸூம் 4 ரன்களுடன் லுங்கி பந்தில் போல்டானார்.
3 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 59 பந்துகளில் 89 ரன்களை எடுத்து ஹாரிஸ், லுங்கி கிடி பந்தில்,டி காக்கிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.
சர்பராஸ் அகமது 2, ஷதாப் கான் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை குவித்தது பாகிஸ்தான்.
தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி கிடி 3-64, இம்ரான் தாஹிர் 2-41 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்: 309 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தது.
ஆனால் ஹஷிம் ஆம்லா வெறும் 2 ரன்களுக்கு ஆமிர் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ்-டி காக் இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது.
17 ஓவர்களில் 73 ரன்களை கடந்தது. 2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 47 ரன்களை எடுத்து டி காக் வெளியேறினார். எய்டன் மார்க்ரமும் 7 ரன்களுடன் ஷதாப் கான் பந்தில் போல்டானார். 22.2 ஓவர்களில் ஸ்கோர் 100-ஐ கடந்தது.
டூபிளெஸ்ஸிஸ் 34-ஆவது அரைசதம்: கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 34-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். இது உலகக் கோப்பையில் அவரது 2-ஆவது அரைசதமாகும்.
5 பவுண்டரியுடன் 63 ரன்களை சேர்த்து ஆமிர் பந்தில் அவுட்டானார் டூபிளெஸ்ஸிஸ். 
35-ஆவது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா. 
ரேஸி வேன்டர் 36, டேவிட் மில்லர் 31, கிறிஸ் மோரிஸ் 16, ரபாடா 3, லுங்கி கிடி 1 ரன்னும் அவுட்டாகியதால், நெருக்கடிக்கு தள்ளப்பட்டது தென்னாப்பிரிக்கா. 
பெலுக்வயோ மட்டுமே 6 பவுண்டரியுடன் 46 ரன்களுடனும், தாஹிர் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
இறுதியில் 50 ஓவர்களில் 259/9 ரன்களை எடுத்து தோல்வியுற்றது தென்னாப்பிரிக்கா.
பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் 3-46, ஷதாப் கான் 3-50 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இத்தோல்வியால் தென்னாப்பிரிக்கா தனது அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.
இறுதியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றது பாகிஸ்தான். ஹாரிஸ் சோûஹைல் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
தென்னாப்பிரிக்கா வெளியேறுகிறது: 2003 உலகக் கோப்பைக்கு பின் தற்போது இரண்டாவது முறையாக தொடக்க சுற்றோடு வெளியேறுகிறது தென்னாப்பிரிக்கா.

புள்ளிகள் பட்டியல் அணி
                
நியூஸிலாந்து    6    5    0    11
ஆஸ்திரேலியா    6    5    1    10
இந்தியா    5    4    0    9
இங்கிலாந்து    6    4    2    8
இலங்கை    6    2    2    6
வங்கதேசம்    6    2    3    5
பாகிஸ்தான்    6    2    3    5
மே.இ.தீவுகள்    6    1    4    3
தென்னாப்பிரிக்கா    7    1    5    3
ஆப்கானிஸ்தான்    6    0    6    0

சுருக்கமான ஸ்கோர்

பாகிஸ்தான் 308/7, ஹாரிஸ் சோஹைல் 89,  பாபர் ஆஸம் 69,

பந்துவீச்சு:

லுங்கி கிடி 3-64.
தென்னாப்பிரிக்கா 259/9
டூபிளெஸ்ஸிஸ் 63,

பந்துவீச்சு:
வஹாப் ரியாஸ் 3-46, 
ஷதாப் 3-50.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com