சுடச்சுட

  
  russel


  இடது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தால் உலகக் கோப்பையில் அடுத்து வரும் ஆட்டங்களில் மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ரஸ்ஸல் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  31 வயதான ரஸ்ஸல் 4 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனினும் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், அடுத்து வரும் 3 ஆட்டங்களில் அவர் ஆட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
  அவருக்கு பதிலாக 26 வயது வீரர் சுனில் அம்ப்ரீஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வரும் 27-ஆம் தேதி ஓல்ட் டிராஃபோர்டில் இந்தியாவுடன் நடைபெறும் ஆட்டத்தில் அவர் பங்கேற்பார். அரையிறுதிக்கான கனவை நனவாக்க மே.இ.தீவுகள் தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெல்ல வேண்டும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai