இங்கிலாந்தின் அரையிறுதி பயணத்துக்கு தடைபோடுமா ஆஸி?இன்று மோதல்

பலம் வாய்ந்த இங்கிலாந்தின் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான பயணத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா தடையாக இருக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பயிற்சியில் ஆஸி. அணி வீரர்கள்.
பயிற்சியில் ஆஸி. அணி வீரர்கள்.


பலம் வாய்ந்த இங்கிலாந்தின் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான பயணத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா தடையாக இருக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் இங்கிலாந்து 6 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்றது. அதே நேரம் பாகிஸ்தானுடனும், இலங்கையுடனும் தோல்வியுற்றது. பட்டியலில் 8 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில் உள்ளது.
அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் ஆஸி. 6 ஆட்டஙகளில் 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.
கட்டாய வெற்றி தேவை
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. மேலும் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும்  என்றால் இங்கிலாந்து கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
அடுத்து பலம் வாய்ந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுடன் இங்கிலாந்து ஆட வேண்டியுள்ளது. ஆனால் கடந்த 1992--ஆம் உலகக் கோப்பைக்கு பின் இங்கிலாந்து இந்த அணிகள் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெட்டிங்லி மைதானத்தில் இலங்கையுடன் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 233 ரன்கள் என்ற இலங்கையின் மிதமான ஸ்கோரை கூட எட்ட முடியாமல் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன் தொடக்க வீரர் ஜேஸன் ராய் காயத்தால் ஆடாதது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், கேப்டன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஆகியோர் அபாரமாக ஆடி வருவது ஆறுதலை தருகிறது. 
உற்சாகத்தில் ஆஸி.: மேலும் ஆஸி. அணியின் தொடக்க வீரர்கள் வார்னர்-பின்ச் இருவரும் அதிரடியாக ஆடத் தொடங்கியுள்ளனர். பந்துவீச்சும் மிச்செல் ஸ்டார்க்கால் வலிமையாக உள்ளது. அவர் அதிக விக்கெட்டுகள் 15 எடுத்து ஆர்ச்சர், ஆமிர் ஆகியோருடன் முதலிடத்தில் உள்ளார்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் வருகை கூடுதல் பலத்தை தந்துள்ளது. அதன் பந்துவீச்சும் பேட் கம்மின்ஸ் ஸம்பா, ஆகியோரால் செம்மையாக உள்ளது.
போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 3 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றுள்ளது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.
காலையில் பலமான இடியுடன் கூடிய மழை பெய்யலாம்  எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டம் தொடங்க சிறிது தாமதமாகும்.


இன்றைய ஆட்டம்
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து
இடம்-லண்டன்,
நேரம்--மதியம் 3.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com