வங்கதேசம் அபார வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வங்கதேசம்.
வெற்றி மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள்.
வெற்றி மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள்.


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வங்கதேசம்.
முதலில் ஆடிய வங்கதேசம் 262/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடி ஆப்கானிஸ்தான் 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அரையிறுதி வாய்ப்பை பெறும் முனைப்பில் உள்ள வங்கதேச அணியும், ஒரு வெற்றி கூட பெறாத ஆப்கன் அணியும், செளதாம்ப்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதின.
டாஸ் வென்ற ஆப்கன் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்கள் எடுத்த நிலையில் முஜிப் பந்துவீச்சில் அவுட்டானார் அதன் பின்னர் தமிம் இக்பால்--ஷகிப் அல் ஹசன் இணை நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தது. இதனால் 14--ஆவது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை சேர்த்தது வங்கதேசம். தமிம் இக்பால் 36 ரன்களுடன் நபி பந்தில் போல்டானார்.
ஷகிப் 45-ஆவது அரைசதம்:
அதன் பின் ஆல்ரவுண்டர் ஷகிப் 51 ரன்களுக்கு முஜிப் பந்தில் எல்பிடபிள்யு ஆனார்.  பொறுப்புடன் ஆடிய ஷகிப் தனது 45-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த உலகக் கோப்பையில் 5-ஆவது முறையாக அரைசதத்தை அடித்துள்ளார் அவர்.
அவருக்கு பின் ஆட வந்த வீரர்கள் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. செளமிய சர்க்கார் 3, மஹ்முத்துல்லா 27, மொஸ்தாக் ஹுசேன் 35, என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
முஷ்பிகுர் ரஹீம் 35-ஆவது அரைசதம்: மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த முஷ்பிகுர் ரஹீம் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 83 ரன்களை எடுத்து தெளலத் ஸ்டரன் பந்தில் அவுட்டானார். இது அவரது 35-ஆவது ஒருநாள் அரைசதமாகும். 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை எடுத்தது வங்கதேசம்.
முஜிப்பூர் ரஹ்மான் 3 விக்கெட்: ஆப்கன் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முஜிப்பூர் ரஹ்மான் 3-39 விக்கெட்டை சாய்த்தார். கேப்டன் குல்பதின் நைப் 2-56, நபி 1-44, தெளலத் 1-64 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆப்கன் தோல்வி: 263 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆப்கன் தரப்பில் கேப்டன் குல்பதின் நைப்-ரஹ்மத் ஷா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த நிலையில், ரஹ்மத் ஷா 24 ரன்களுடனும், அவருக்கு பின் வந்த ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 11 ரன்களுடனும் வெளியேறினர்.
பொறுப்பாக ஆடி வந்த குல்பதின் நைப், ஒருநாள் ஆட்டங்களில் 1000 ரன்களை கடந்த பெருமையைப் பெற்றார். 
ஷகிப் அல் ஹசனால் வீழ்ச்சி:
ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் 47 ரன்களுடன் அவுட்டானார் கேப்டன் குல்பதின். எனினும் அடுத்து அதிர்ச்சி தரும் வகையில் ஆல்ரவுண்டர் முகமது நபியும் டக் அவுட்டாகி வெளியேறினார். 
20 ரன்கள் எடுத்திருந்த அஷ்கர் ஆப்கன், ஷகிப் பந்தில் சபீரிடம் கேட்ச் தந்து அவுட்டானார். 11 ரன்கள் எடுத்த இக்ரம் அலியை ரன் அவுட்டாக்கினார் லிட்டன் தாஸ். 
நஜிபுல்லா ஸட்ரன் 23, ரஷித் கான் 2 ரன்களுக்கு அவுட்டாயினர். அப்போது 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களுடன் தோல்வியின் விளிம்புக்கு தள்ளப்பட்டது ஆப்கன்.
தெளலத் ஸட்ரன், முஜிப்பூர் ரஹ்மான் ஆகியோர் கடைசியில் டக் அவுட்டாகினர். இறுதியில் 47 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆப்கன் அணி தனது 7-ஆவது தோல்வியைப் பெற்றது. சமியுல்லா ஷின்வாரி 49 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்: பேட்டிங்கிலும் 51 ரன்களை விளாசிய ஷகிப் அல் ஹசன், அபாரமாக பந்துவீசி 5-29 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்காவது முறையாக அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முஸ்தபிஸþர் ரஹ்மான் 2-32 விக்கெட்டுகளை சாய்த்தார்.
யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்தார் ஷகிப்: ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டத்தில் 5 விக்கெட் வீழ்த்தியும், 50 ரன்கள் விளாசிய சாதனையை யுவராஜ் சிங் செய்திருந்தார். தற்போது வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனும் அச்சாதனையை சமன் செய்துள்ளார்.
5-ஆவது இடத்தில் வங்கதேசம்: இந்த வெற்றியின் மூலம் 7 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியது வங்கதேசம். அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.


 சுருக்கமான ஸ்கோர்
வங்கதேசம் 262/7, முஷ்பிகுர் ரஹீம் 83, ஷகிப் 51,

பந்துவீச்சு:
முஜிப்பூர் ரஹ்மான் 3-39.
ஆப்கன் 200 ஆல் அவுட்
ஷின்வாரி 49, குல்பதின் 47,
பந்துவீச்சு:
ஷகிப் அல் ஹசன் 5-29.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com