அரையிறுதியில் ஆஸ்திரேலியா

இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சிறப்பை பெற்றது ஆஸ்திரேலியா. ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள் பெஹ்ரண்டர்ப்,
அரையிறுதியில் ஆஸ்திரேலியா

இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சிறப்பை பெற்றது ஆஸ்திரேலியா. ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள் பெஹ்ரண்டர்ப், மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் அபாரமாக பந்துவீசி இங்கிலாந்தை நிலைகுலையச் செய்தனர்.
முதலில் ஆடிய ஆஸி. அணி 285/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லார்ட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டத்தில் ஆஸி.யுடன் மோதியது இங்கிலாந்து. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. 

அரையிறுதிக்கு நுழைந்த முதல் அணி
நடப்பு உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது ஆஸி.

பின்ச்-வார்னர் அதிரடி
தொடக்க வீரர்களாக களமிறங்கிட ஆரோன் பின்ச்-டேவிட் வார்னர் இணை பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. இருவரின் நிலையான ஆட்டத்தால் 11.5-ஆவது ஓவரில் ஸ்கோர் 50-ஐ கடந்தது. இருவரும் அவ்வப்போது எளிதாக கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டினர். 

பின்ச் 15-ஆவது ஒருநாள் சதம்
17.5 ஆவது ஓவரில் ஸ்கோர் 100-ஐ கடந்த நிலையில், பின்ச்சும், வார்னரும் அரைசதம் அடித்தனர். 6 பவுண்டரியுடன் 53 ரன்களை சேர்த்த வார்னரை அவுட்டாக்கினார் மொயின் அலி. இது அவரது 20-ஆவது அரைசதமாகும். அவருக்கு பின் உஸ்மான் காஜா 23 ரன்களுடன் வெளியேறினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய கேப்டன் பின்ச் தனது 15-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 2 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 116 பந்துகளில் 100 ரன்களை விளாசிய அவர், ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் வெளியேறினார்.

சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்டிங்
முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 38 ரன்களுடனும், அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 12, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 8, பேட் கம்மின்ஸ் 1 என சொற்ப ரன்களுக்கு வீழ்ந்தனர். அப்போது ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களாக இருந்தது.
அதன் பின் 5 பவுண்டரியுடன் 38 ரன்களுடன் அலெக்ஸ் கரேவும், 4 ரன்னுடன் ஸ்டார்க்கும் அவுட்டாகாமல் இருந்தனர். இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை எடுத்திருந்தது ஆஸி. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2-46 விக்கெட்டையும், ஆர்ச்சர், மார்க் உட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சிறந்த தொடக்கத்தை தவற விட்ட ஆஸி.
பின்ச்-வார்னர் ஆகியோர் ஏற்படுத்தி தந்த சிறந்த தொடக்கத்தை தவற விட்டது ஆஸி. அணி. ஸ்கோர் 300 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 
நிலையில், மிடில் ஆர்டர் பேட்டிங்  சொதப்பியதால், ஆஸி. அணி சிக்கலுக்கு தள்ளப்பட்டது. 

வார்னர் 500
இந்த உலகக் கோப்பை போட்டியில் அபாரமாக ஆடி வரும் வார்னர் ஒட்டுமொத்தமாக 500 ரன்களை கடந்தார். மேலும் கேப்டன் பின்ச்-வார்னர் உள்ளிட்ட இருவரும் இணைந்து இந்த உலகக் கோப்பையில் மூன்றாவது முறையாக 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். 

இங்கிலாந்து தோல்வி
286 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் வின்ஸ்-ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் பெஹ்ரண்டர்ப் பந்தில் போல்டாகி டக் அவுட்டானார் ஜேம்ஸ் வின்ஸ். அதிரடி வீரரான  ஜோ ரூட் 8 ரன்களுடனும், கேப்டன் மோர்கன்  4 ரன்களுடனும் ஸ்டார்க் பந்துவீச்சில் வெளியேறினர். 
பின்னர் பேர்ஸ்டோ-பென் ஸ்டோக்ஸ் சரிவில் இருந்து அணியை மீட்கப் போராடினர். எனினும் பேர்ஸ்டோ 27 ரன்களுடன் பெஹ்ரண்டர்ப் பந்துவீச்சில் கம்மின்ஸிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.  
ஜோஸ் பட்லர் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டாய்னிஸ் பந்தில் வெளியேறினார். தொடக்க வரிசை சரிந்ததால், சிக்கலுக்கு தள்ளப்பட்டது இங்கிலாந்து.
ஸ்டோக்ஸ் 18-ஆவது அரைசதம்: நிதானமாக ஆடி வந்த பென் ஸ்டோக்ஸ் தனது 18-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். 89 ரன்களுடன் அவர் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். மொயின் அலி 6, கிறிஸ் வோக்ஸ் 26 ரன்களனுடனும் அவுட்டானார்கள்.  இறுதியில் 44.4 ஓவர்களில் 221ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்லியை தழுவியது இங்கிலாந்து.

1983 சாம்பியன்
36 ஆண்டுகளுக்கு முன்பு 1983 ஜூன் 25இல் லண்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அப்போதைய நடப்பு சாம்பியன் மே.இ.தீவுகளை 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி. இந்த வியக்கத்தக்க வெற்றி, இந்திய கிரிக்கெட்டில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

சுருக்கமான ஸ்கார்
ஆஸ்திரேலியா 285/7,
பின்ச் 100, வார்னர் 53,
பந்துவீச்சு:
கிறிஸ் வோக்ஸ் 2-46.

இன்றைய ஆட்டம்:
நியூஸிலாந்து-பாகிஸ்தான்,
இடம்: பர்மிங்ஹாம்,
நேரம்: மதியம் 3.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com