விளையாட்டு சம்மேளனங்களுக்கு கிரண் ரிஜிஜு எச்சரிக்கை

முறைகேடு, தவறான நிர்வாகத்தால் விளையாட்டு தேசிய சம்மேளனங்கள் தீங்கு விளைவித்தால் மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரித்துளளார்.
விளையாட்டு சம்மேளனங்களுக்கு கிரண் ரிஜிஜு எச்சரிக்கை


முறைகேடு, தவறான நிர்வாகத்தால் விளையாட்டு தேசிய சம்மேளனங்கள் தீங்கு விளைவித்தால் மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரித்துளளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வில்வித்தை சம்மேளனம், ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனம், உள்ளிட்ட சில சம்மேளனங்களில் நிர்வாகிகள் இடையே நிலவும் போட்டியால் விûளாட்டும், வீரர்களும் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு சம்மேளனங்களை நடத்துவதில் தலையிடாது. ஆனால் அவற்றின் தவறான நிர்வாகம், முறைகேடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் வெறும் பார்வையாளராக இருக்க மாட்டோம். சர்வதேச சம்மேளனங்களுடன் மோதல் ஏற்பட்டால், தேசிய சம்மேளனங்கள் உடனே மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
வில்வித்தை சம்மேளன தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் சில உத்தரவுகளை அளித்துள்ளது. ஆனால் அதன்பின் இரு பிரிவுகளின் செயல்பாடுகளும் ஏற்படையதாக இல்லை. நீதிமன்ற உத்தரவின்படியும், வீரர்கள் நலனைக் கருதியும் வில்வித்தை சம்மேளனம் செயல்பட வேண்டும். தற்போது அருணாசலப்பிரதேச மாநில வில்வித்தை சங்கத் தலைவராக உள்ள நான் விரைவில் எனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளேன். புதிய தலைவர் தேர்தலை நடத்துமாறு கூறியுள்ளேன்.
ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம்:
மேலும் கடந்த 2012 முதல் ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனத்துக்கு அரசு அங்கீகாரம் இல்லாமல் உள்ளது. 2 பிரிவுகளாக இயங்குவதால், அதை இந்திய ஒலிம்பிக் சங்கம் தகுதி நீக்கியுள்ளது. ஜிம்னாஸ்டிக் வீரர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க நான் தலையிடுவேன். விளையாட்டுத் துறை செயலாளர் அனைத்து சம்மேளனங்களுடன் கலந்து பேசி வருகிறார். நானும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவேன். விளையாட்டுக் கொள்கை தவிர, உள்கட்டமைப்பு வசதிகள், மேலாண்மை, நிபுணர்கள் போன்றவை குறித்து பேசுவோம் என்றார் ரிஜிஜு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com