Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    


       கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் கடைசி குரூப் சுற்று ஆட்டங்களில் ஒன்றில் உருகுவே 1-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்த, ஈகுவடார்-ஜப்பான் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. 


        டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்காக, இந்திய டேவிஸ் கோப்பை அணி 55 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்வதற்காக மத்திய அரசிடம் அகில இந்திய டென்னிஸ் சங்கம் அனுமதி கோரியுள்ளது. 


        சர்வதேச குத்துச்சண்டை சங்கம் ஒலிம்பிக் தொடர்புடைய போட்டிகளை நடத்துவதற்கான அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி புதன்கிழமை நீக்கியது. 


        சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார். 


        பெண்களுக்கான ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிங்கத்தான் தொடர் ஓட்டப்போட்டியின் 6-ஆவது சீசன், வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி சென்னை தீவுத் திடலில் நடைபெறுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai