கோலி புதிய உலக சாதனை
By DIN | Published On : 28th June 2019 04:27 AM | Last Updated : 28th June 2019 04:27 AM | அ+அ அ- |

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலும் துரிதமாக 20 ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி. இதன் மூலம் லாரா, சச்சின் ஆகியோரின் முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளார்.
லாரா, சச்சின் ஆகியோர் 453 இன்னிங்ஸ்களில் 20,000 ரன்களை துரிதமாக கடந்தவர்கள் என்ற சாதனையை படைத்திருந்தனர். ஆனால் கோலி வெறும் 417 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியா அபார வெற்றி: மே.இ.தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா முதலில் தடுமாறி பின்னர் மீண்டு 268/7 ரன்களை குவித்தது. மே.இ.திவுகள் 34.2 ஓவர்களிலேயே 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.