13000 ரன்கள்: தோனி சாதனை
By DIN | Published On : 04th March 2019 01:31 AM | Last Updated : 04th March 2019 01:31 AM | அ+அ அ- |

ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் அரைசதம் விளாசிய தோனி புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
முதல் தர கிரிக்கெட் (லிஸ்ட் ஏ) ஆட்டங்களில் ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, ராகுல் திராவிட் ஆகியோர் 13000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளனர்.
ஆஸி.யுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 59 ரன்களை குவித்த தோனி, தற்போது முதல்தர கிரிக்கெட்டில் 13054 ரன்களை குவித்து 4-ஆம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவரது பட்டியலில் 412 முதல் தர ஆட்டங்கள் அடங்கும்.