டி20: இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த இந்திய மகளிர் அணி!
By எழில் | Published On : 04th March 2019 01:56 PM | Last Updated : 04th March 2019 01:59 PM | அ+அ அ- |

குவாஹட்டியில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து மகளிர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பியூமோண்ட் 57 பந்துகளில் 62 ரன்களும் கேப்டன் ஹெதர் நைட் 20 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து நல்ல ஸ்கோர் எட்ட உதவினார்கள்.
இந்திய அணி இன்னிங்ஸில், முன்வரிசை வீராங்கனைகள் சொதப்பியதால் முதலிலேயே தோல்வி உறுதியானது. மந்தனா 2, ரோட்ரிக்ஸ் 2, மிதாலி ராஜ் 7 ரன்கள் மட்டுமே ஏமாற்றமளித்தார்கள். கடைசியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய மகளிர் அணி. அதிகபட்சமாக, ஷிகா பாண்டே 23ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்த டி20 ஆட்டம் வியாழன் அன்று குவாஹட்டியில் நடைபெறவுள்ளது.