பாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி!
By எழில் | Published On : 04th March 2019 02:40 PM | Last Updated : 04th March 2019 02:42 PM | அ+அ அ- |

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, அக்டோபரில் அவர் கர்னி சேனா கட்சியில் இணைந்தார். மகளிர் பிரிவில் தலைவர் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
பிரதமர் மோடி எனக்கு ஊக்கமாக உள்ளார். அவர் தான் நான் பாஜகவில் இணையக் காரணம். பாஜகவில் சேர்ந்ததால் என்னால் நாட்டுக்குச் சேவை செய்யமுடியும். என் கணவர் ராஜ்புத் இனத்துக்கு மட்டுமல்லாமல் இந்திய நாட்டின் இளைஞர்களின் பெருமைக்குரியவர். பாஜகவில் இணைந்ததன் மூலம் என்னால் தனி அடையாளத்தை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார் ரிவபா. பாஜக அமைச்சர் ஃபல்டு, எம்பி பூணம், ஜாம்நகர் நகரத் தலைவர் ஹஸ்முக் ஹிண்டோச்சா, ஜாம்நகர் மாவட்டத் தலைவர் சந்திரேஷ் படேல் ஆகியோரின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார் ரிவபா.