இன்று முதல் ஆட்டம்: மகளிர் டி20 தொடரையும் கைப்பற்றுமா இந்தியா?

உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று முதல் ஆட்டம்: மகளிர் டி20 தொடரையும் கைப்பற்றுமா இந்தியா?

உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இங்கிலாந்து மகளிர் அணி ஏற்கெனவே மும்பையில் நடைபெற்ற ஒரு நாள் தொடரை 1-2 என இந்தியாவிடம் இழந்தது. இதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட மகளிர் டி20 தொடர் குவாஹாட்டியில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில் வரும் 2020-இல் மகளிர் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இதற்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பாக ஆடி வரும் நிலையில் குறுகிய ஓவர்கள் ஆட்டமான டி20-இல் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் நியூஸிலாந்தில் நடைபெற்ற தொடரை 0-3 என இழந்தது இந்தியா. அங்கு ஒருநாள் தொடரை கைப்பற்றினாலும், டி20 தொடரை இழந்தது.

தற்போது இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை வெல்லும் தீவிரத்தில் உள்ளது இந்திய அணி. குறிப்பாக அதிரடி வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கெளர் காயத்தில் இருந்து இன்னும் குணமாகவில்லை. இதனால் மிடில் ஆர்டர் பேட்டிங் வலுவிழந்து உள்ளது.

கேப்டன் ஸ்மிருதி மந்தானா

அவருக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டுளள ஸ்மிருதி மந்தானாவுக்கு தனது தலைமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

நியூஸிலாந்தில் சிறப்பாக ஆடிய மந்தானா, இங்கிலாந்துடன் ஒருநாள் தொடரில் 2 அரைசதங்களை விளாசினார். ஹர்மன்ப்ரீத் இல்லாத நிலையில் ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், இந்த டி20 தொடரில் முக்கிய பங்காற்றுவார். நியூஸி தொடரில் மிதாலி முதல் இரண்டு ஆட்டங்களில் சேர்க்கப்படவில்லை. கடைசி ஆட்டத்தில் மட்டுமே ஆடினார்.

புதிய வீராங்கனைகள் அறிமுகம்

கடந்த 2018 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது இந்தியா. அதில் வேதா கிருஷ்ணமூர்த்தி சோபிக்காததால் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார். தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். பிரியா புனியா, தயாளன் ஹேமலதா ஆகியோருக்கு பதிலாக ஹர்லின் தியோல், பாரதி புல்மாலி சேர்க்கப்பட்டுள்ளனர். 

மான்ஸி ஜோஷிக்கு பதிலாக இடதுகை பந்துவீச்சாளர் கோமல் ஸன்ஸாட் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சை ஷிகா பாண்டேவுடன் கோமல் மேற்கொள்வார்.

ஆட்ட நேரம்: காலை 11.00.
இடம்: குவாஹாட்டி.


உலகக் கோப்பை வெல்வதே நோக்கம்

உலகக்கோப்பையை வெல்வதே எனது முக்கிய நோக்கம் என இந்திய டி20 மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தானா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துடன் டி20 தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
ஐசிசி மகளிர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஆனாலும், தேசிய அணிக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. தொடர்ந்து முதலிடம் வகித்து, உலகக் கோப்பையை பெற வேண்டும்.
முதலிடத்தை பெற்றாலும், மேலும் கடினமாக உழைக்க வேண்டும். அப்போது தான் நோக்கத்தை அடைய முடியும். இங்கிலாந்துடன் நடக்கவுள்ள தொடர், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பிரதான வீராங்கனைகளை அடையாளம் காண உதவும்.
இத்தொடரில் புதிய வீராங்கனைகளுடன் ஆட உள்ளோம். முதலில் தொடரை கைப்பற்ற வேண்டும்.
2020 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு அணியை தயார்படுத்தும் பணியை அடுத்த 8 மாதங்களில் முடிக்க வேண்டும். நியூஸிலாந்து தொடரில் மேற்கொண்ட தவறுகள் குறித்து பயிற்சியாளர் டபிள்யு.வி.ராமன் கூறியுள்ளார்.
டி20 ஆட்டங்களுக்கு ஆல்ரவுண்டர் ஹர்லின் தியோல் சரியான தேர்வு ஆவார். எதிர்காலத்தில் அணிக்கு அவரது பங்கு அதிகம் இருக்கும். சிறிய நகரங்களில் ஆட்டங்களை நடைபெற பிசிசிஐ ஏற்பாடு செய்தது, அதிக ரசிகர்களை ஈர்க்கிறது என்றார் ஸ்மிருதி.


அணிகள்

இந்தியா

ஸ்மிருதி மந்தானா (கேப்டன்), மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, தனியா பாட்டியா, பாரதி புல்மாலி, அனுஜா பட்டீல், ஷிகா பாண்டே, கோமல் ஸன்ஸாட், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லின் தியோல்.

இங்கிலாந்து

ஹீதர் நைட் (கேப்டன்), டேமி பீமெளன்ட், கேத்தரின் பிரன்ட், கேட் கிராஸ், சோபியா டங்க்லி, பிரேயா டேவிஸ், ஜார்ஜியா எல்விஸ், ஏமி ஜோன்ஸ், லாரா மார்ஷ், நடாலி ஷிவர், அன்யா ஷுருப்úஸால், லின்ஸி ஸ்மித், லாரன் வின்பில்ட், டேனியல் வயாட், அலெக்ஸ் ஹார்ட்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com