தொடரை சமன் செய்தது மே.இ.தீவுகள்
By DIN | Published On : 04th March 2019 01:32 AM | Last Updated : 04th March 2019 01:32 AM | அ+அ அ- |

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-2 என சமன் செய்தது மே.இ.தீவுகள்.
செயின்ட் லூசியாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 28.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் 23, மொர்கன் 18, பென் ஸ்டோக்ஸ் 15 ஆகியோர் மட்டுமே ஒரளவு ரன்களை எடுத்தனர். கிறிஸ் வோக்ஸ், டாம் கர்ரன், அடில் ரஷித் ஆகியோர் டக் அவுட்டாயினர். மே.இ. தீவுகள் தரப்பில் ஓஷேன் தாமஸ் அருமையாக பந்துவீசி 21 ரன்களை மட்டும் விட்டுத்தந்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜேஸன் ஹோல்டர், பிராத்வொயிட் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மே.இ.தீவுகள் 12.1 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கிறிஸ் கெயில் அதிரடியாக ஆடி 9 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 27 பந்துகளில் 77 ரன்களை விளாசினார். ஷிம்ரன் ஹெட்மயர் 11, பிராவோ 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் 2 விக்கெட்டை சாய்த்தார்.
இதன் மூலம் தொடரை 2-ó2 என சமன் செய்தது மே.இ.தீவுகள்.ஓஷேன் தாமஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஒரு நாள் தொடர் நாயகனாக கிறிஸ் கெயில் தேர்வு செய்யப்பட்டார்.