லா லிகா பார்சிலோனாவுக்கு பட்ட வாய்ப்பு
By DIN | Published On : 04th March 2019 01:33 AM | Last Updated : 04th March 2019 01:33 AM | அ+அ அ- |

லா லீகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வைரியான ரியல் மாட்ரிட்டை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை உýதி செய்துள்ளது.
கோபா டெல் ரே போட்டியில் ஏற்கெனவே ரியல் மாட்ரிட் அணியை வெளியேற்றிய நிலையில் பார்சிலோனா இந்த ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. மெஸ்ஸி தலைமையிலான அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது.
மிட்பீல்டர் இவான் ரக்டிக் அற்புதமாக அணியின் ஓரே வெற்றி கோலை அடித்தார். தற்போது பட்டியலில் முதலிடத்தில் உள்ள பார்கா அணி 12 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது. பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.