ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது இனியன் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்: விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு!

இந்தியாவின் 61-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது இனியன்...
ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது இனியன் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்: விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு!

இந்தியாவின் 61-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது இனியன்.

பிரான்சில் நடைபெற்று வரும் நாய்சியல் ஓபன் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் ஃபெடோர்சக்கைத் தோற்கடித்து ஈஎல்ஓ தரவரிசையில் 2500 புள்ளிகளைக் கடந்துள்ளார் இனியன். இதையடுத்து கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான முழுத்தகுதிகளை அடைந்து இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைத் தற்போது பெற்றுள்ளார். 

கடந்த வருடம் ஜூலை மாதம் கிராண்ட் மாஸ்டருக்குரிய மூன்று நார்மைகளை அவர் அடைந்தார். அதன்பிறகு கூடுதலாக மேலும் இரு நார்மைகளையும் அடைந்தார். எனினும் அவர் தற்போதுதான் 2500 புள்ளிகளைக் கடந்துள்ளார். 

இதையடுத்து இனியனுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த். அவர் கூறியதாவது: வாழ்த்துகள் மற்றும் நல்வரவு. 1987-ல் நமக்கொரு கிராண்ட் மாஸ்டர் கிடைப்பாரா என எண்ணினோம். யார் முதலில் வருவார்கள் என ஒருவரையொருவர் கவனித்துக்கொண்டோம். இப்போது பார்த்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய கிராண்ட் மாஸ்டர் நமக்குக் கிடைக்கிறார் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com