துளிகள்...

ரியல் காஷ்மீர்-மினர்வா பஞ்சாப் அணிகளுக்கு இடையில் ஏற்கெனவே கைவிடப்பட்ட ஐ லீக் கால்பந்து ஆட்டம் மீண்டும் நடைபெறும் என ஏஐஎப்எப் அறிவித்துள்ளது.

ரியல் காஷ்மீர்-மினர்வா பஞ்சாப் அணிகளுக்கு இடையில் ஏற்கெனவே கைவிடப்பட்ட ஐ லீக் கால்பந்து ஆட்டம் மீண்டும் நடைபெறும் என ஏஐஎப்எப் அறிவித்துள்ளது. புல்வாமா தாக்குதல் எதிரொலியாக ஸ்ரீநகரில் நடைபெறவிருந்த ஆட்டத்தில் பாதுகாப்பு காரணங்களால் தான் பங்கேற்க முடியாது என மினர்வா பஞ்சாப் கூறியிருந்தது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ஏஐஎப்எப் தெரிவித்துள்ளது.

பாகு, டோஹாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்க நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகருக்கு சாய் னுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் ஆடவர் பிரிவுக்கு தேர்வு போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் இந்தியா ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்புவில் புதன்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக கொழும்பு எஃப்சி அணியுடன் மோதுகிறது ஐஎல்எஸ் சாம்பியன் சென்னையின் எஃப்சி. தெற்காசிய மண்டலத்தில் இருந்து பிரதான சுற்றுக்கு தகுதி பெற முனைந்துள்ளது சென்னையின் அணி.

இந்தியாவில் கால்பந்து ஆட்டத்துக்கு மேலும் உத்வேகம் தரும் வகையில் பிரபலமான யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வரும் வெள்ளிக்கிழமை மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்கிறார் போர்ச்சுகல் ஜாம்பவான் லூயிஸ் பிகோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com