
அமெரிக்காவின் இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் உலகின் 18-ஆம் நிலை வீரர் நிக்கோலஸ் பஸிலாஷ்வில்லியை வீழ்த்தி இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது வாழ்க்கையில் பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.
உலகின் 18-ஆம் நிலை வீரரான பஸிலாஷ்வில்லியை 6-4, 6-7, 7-6, என்ற செட் கணக்கில் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் போராடி வென்றார் பிரஜ்னேஷ். இவர்உலகின் 97-ஆம் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களில் பிரஜ்னேஷ் கடுமையாக போராட்டத்தை சந்தித்து வென்றார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இது பெரிய போட்டியாக இருந்தது. முந்தைய சுற்றைக் காட்டிலும் இதில் சிறப்பாக ஆடினேன். எனக்கு எதிராக ஆடியவர் சிறப்பான வீரர் என்பதால் கவனம் செலுத்தி ஆடினேன். முதல் 20 இடங்களில் உள்ளார். இரண்டாவது செட்டிலேயே ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளை வீணடித்து விட்டேன்என்றார்.
கடந்த 2018இல் ஸ்டட்கர்ட் போட்டியில் 23-ஆம் நிலை வீரர் டெனிஸ் ஷபவலோவை வென்றிருந்தார் பிரஜ்னேஷ்.
ஜோகோவிச் வெற்றி: உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிஜோர்ன் பிராட்லெங்கோவை வென்று 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஏனைய ஆட்டங்களில் ஆஸி. வீரர் நிக் கிரிஜியோûஸ 6-4 6-4 என்ற நேர் செட்களில் ஜெர்மன் வீரர் பிலிப் கோல்ஸ்கைரைபர் வென்றார்.
மகளிர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் மூன்றாம் நிலை வீராங்கனை பெட்ரா குவிட்டோவாவை வீழ்த்தினார்.
பிளிஸ்கோவா 6-7, 6-1, 6-1 என ஜப்பானின் மிஸாகியை வென்றார்.