மீண்டும் மோசமாக பேட்டிங் செய்து மீண்டும் தோற்ற மே.இ. அணி: அசத்திய இங்கிலாந்து!

ஒருநாள் தொடர் எப்படி பரபரப்பாக நடைபெற்றதோ அதற்கு நேர்மாறாக நடந்துமுடிந்துள்ளது டி20 தொடர்...
மீண்டும் மோசமாக பேட்டிங் செய்து மீண்டும் தோற்ற மே.இ. அணி: அசத்திய இங்கிலாந்து!

ஒருநாள் தொடர் எப்படி பரபரப்பாக நடைபெற்றதோ அதற்கு நேர்மாறாக நடந்துமுடிந்துள்ளது டி20 தொடர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20-யையும் எளிதாக வென்று டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது இங்கிலாந்து அணி. 

ஏற்கெனவே நடைபெற்ற இரு டி20 ஆட்டங்களையும் இங்கிலாந்து அணி வென்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் செயின்ட் கிட்ஸில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய மே.இ. அணி இந்தமுறையும் பேட்டிங்கில் சொதப்பியது. இதனால் அந்த அணி 13 ஓவர்களிலேயே 71 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்று வீரர்கள் தலா 11 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை நோகடித்தார்கள். இங்கிலாந்தின் அட்டகாசப் பந்துவீச்சின் முன்னால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது. முக்கியமாக, வில்லே 3 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வுட்டுக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன.

இந்த எளிதான இலக்கைச் சுலபமாக அடைந்தது இங்கிலாந்து அணி. 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து அபார வெற்றி கண்டு டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது. பேர்ஸ்டோவ் 37 ரன்கள் எடுத்தார். 

ஆட்ட நாயகன் விருது வில்லேவுக்கும் தொடர் நாயகன் விருது கிறிஸ் ஜார்டனுக்கும் கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com