சுடச்சுட

  

  அஸ்வின் அழைப்பை மதித்து சென்னைக்கு வந்து கிளப் ஆட்டத்தில் விளையாடிய புஜாரா!

  By எழில்  |   Published on : 13th March 2019 02:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pujara5151

   

  இது முக்கியமான ஆட்டம். சென்னைக்கு வந்து விளையாட முடியுமா?

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற புஜாராவை சென்னையில் நடைபெறும் டிஎன்சிஏ டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட அழைத்தார் அஸ்வின். என்னைப் போய் உள்ளூர் மேட்சுக்கெல்லாம் அழைக்கலாமா என்று கோபித்திருக்கலாம் புஜாரா. ஆனால் அஸ்வினின் கோரிக்கையை உடனே ஏற்று சென்னை வந்தார் புஜாரா.

  சென்னை - புதுப்பாக்கத்தில் உள்ள விபி நெஸ்ட் மைதானத்தில் நேற்று தொடங்கிய எம்ஆர்சி ஏ (Mylapore Recreation Club 'A') - கிரோம்பெஸ்ட் கிளப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் அஸ்வினின் எம்ஆர்சி அணிக்காக விளையாட வந்த 31 வயது புஜாரா, சதமடித்து 162 ரன்கள் குவித்த பிறகே ஆட்டமிழந்தார். 232 பந்துகளில் 1 சிக்ஸர், 18 பவுண்டரிகள் எடுத்தார். முதல் நாளின் முடிவில் எம்ஆர்சி ஏ அணி, 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. 

  சென்னை டிவிஷன் லீக் ஆட்டங்களில் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் விளையாடுவது நல்லது என நண்பர்கள் கூறினார்கள். எங்கள் கேப்டன் அஸ்வின் அழைத்ததால் விளையாட இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார் புஜாரா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai