சுடச்சுட

  

  இந்த வீரர் தான் 2019 ஐபிஎல் போட்டியின் தொடர் நாயகன் விருதைப் பெறுவார்: ஷேன் வார்னே புதிய கணிப்பு!

  By எழில்  |   Published on : 13th March 2019 10:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  warne123xx

   

  ஐபிஎல் (2019) 12-வது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 

  இந்நிலையில் ஐபிஎல் குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல கிரிக்கெட் வீரருமான ஷேன் வார்னே. அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

  மும்பைக்கு மீண்டும் வந்ததையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தூதராகச் செயல்படுவதையும் சிறப்பாகக் கருதுகிறேன். எங்கள் முதல் ஆட்டத்துக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. இந்த அணியைப் பார்க்கும்போது இந்தமுறை ஐபிஎல் போட்டியை ராஜஸ்தான் அணி தான் வெல்லும் என நினைக்கிறேன். சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதைப் பெறுவார் என்றும் கருதுகிறேன் எனத் தன் கணிப்பை வெளியிட்டுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai