சுடச்சுட

  

  உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் XI குறித்து தெளிவாக உள்ளோம்: விராட் கோலி

  By எழில்  |   Published on : 14th March 2019 02:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kohli_eleven1

   

  இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237 ரன்களுக்கு வீழ்ந்தது. 

  ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் காஜா 100 ரன்கள் விளாசினார். இந்தியத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய இன்னிங்ஸில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் ஆடம் ஸம்பா 3 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார்.

  தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

  இந்தத் தோல்வியால் ஓய்வறையில் யாரும் பீதியடையவில்லை. பயிற்சியாளர்கள் யாரும் மனம் தளரவில்லை. ஏனெனில் கடைசி 3 ஒருநாள் ஆட்டங்களில் என்ன வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த ஒருநாள் தொடருக்குப் பிறகு உலகக் கோப்பையில் விளையாடவேண்டும் என்பதால். நாங்கள் நல்ல அணியாக இருந்தாலும் நெருக்கடியான கட்டங்களில் ஆஸ்திரேலியா எங்களை விடவும் சிறப்பாக விளையாடியது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு கிட்டத்தட்ட சரியான அணியைக் கொண்டுள்ளோம். இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப ஒரேயொரு மாற்றம் மட்டுமே இருக்கும். அதைத் தவிர, உலகக் கோப்பைப் போட்டியில் எந்த லெவனைக் கொண்டு விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். 

  கடைசி 3 ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தோம். குறிப்பிட்ட சூழலில் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்க்க எண்ணினோம். இதை ஒரு சாக்காகச் சொல்லவில்லை. ஆனால் கடைசி மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் சிலருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தோம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai