சுல்தான் அஸ்லான் ஷா போட்டி இளம் வீரர்களுக்கு முக்கியமானது:  சுரேந்தர் குமார்

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டிகள் எதிர்வரும் நிலையில், சுல்தான் அஸ்லான் ஷா போட்டியானது இளம் வீரர்கள் தங்களது திறமைகளை


டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டிகள் எதிர்வரும் நிலையில், சுல்தான் அஸ்லான் ஷா போட்டியானது இளம் வீரர்கள் தங்களது திறமைகளை பரிசோதித்துக் கொள்ள நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என்று இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டன் சுரேந்தர் குமார் கூறியுள்ளார்.
சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டிக்கான இந்திய அணியில் ஹார்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், சுமித், நீலகண்ட சர்மா, சுமித் குமார், குரிந்தர் சிங், சிம்ரன்ஜித் சிங், குர்ஜந்த் சிங் உள்ளிட்ட இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சர்வதேச ஆட்டத்தில் சீனியர் அணியில் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் அவர்கள் சுல்தான் அஸ்லான் ஷா போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அணியின் துணை கேப்டன் சுரேந்தர் குமார் கூறியதாவது:
இளம் வீரர்கள் தங்களது திறமைகளை பரிசோதித்துக் கொள்வதற்கும், சர்வதேச போட்டிகளுக்கு ஏற்றாற்போல் தங்களை எவ்வாறு தகுதிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை அறிவதற்கும் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி ஒரு சிறந்த சோதனைக் களமாகும்.
இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போன்ற மிகப்பெரிய போட்டிகளுக்கு தயாராகக் கூடிய அனுபவங்களை அவர்கள் பெறுவார்கள். இந்த இளம் வீரர்களில் சிலர் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.
ஆட்டத்தின்போது இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்வது தொடர்பாக அந்த வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டிகள் எதிர்வரும் நிலையில், அவர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்வது அணிக்கான பலமாக இருக்கும் என்று சுரேந்தர் கூறினார்.
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி வரும் 23-ஆம் தேதி மலேசியாவில் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com