துளிகள்...

துளிகள்...


    உலக அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 8-ஆவது சுற்றில் ஆடவர் பிரிவில் இந்தியா-அமெரிக்கா மோதிய ஆட்டம் 2-2 என டிரா ஆனது. மகளிர் பிரிவில் இந்தியா 1.5-2.5 என்ற கணக்கில் உக்ரைனிடம் வீழ்ந்தது.
    சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-12, 21-13 என்ற செட்களில் மலேசியாவின் கீன் யீவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
    இரைப்பை குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற இருக்கிறார். இதனால், ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.
    லோகேஷ் ராகுலும், ஹார்திக் பாண்டியாவும் இனிவரும் காலங்களில் பொதுவில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான அனுபவத்தை பெற்றிருப்பார்கள் என்று இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் இருவரும் கருத்து தெரிவித்த விவகாரத்தை குறிப்பிட்டு ரவி சாஸ்திரி இவ்வாறு கூறினார்.
    மும்பை தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியன் ஆயில் அணி 9-7 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்-சிந்த் வங்கி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்ட நேரத்தை குறைப்பது, ஃப்ரீ ஹிட்டுகளை அனுமதிப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை எம்சிசி வழங்கியுள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டிகள் எதிர்வரும் நிலையில், சுல்தான் அஸ்லான் ஷா போட்டி இளம் வீரர்கள் திறமைகளை பரிசோதித்துக் கொள்ள நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என்று இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டன் சுரேந்தர் குமார் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com